மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தது இந்திய அணி

117

 

சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று பிரிவுகளிலும் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதித்துள்ளது.

அதன்படி, உலக தரவரிசையில் ரி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு அடுத்தபடியாக
இதற்கு முன் 2012ம் ஆண்டு தென்னாபிரிக்க அணி இந்த சாதனையை நிகழ்த்தியது.

மொஹாலியில் நேற்று (22) நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை 05 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இந்திய அணி, போனஸ் புள்ளிகளின் அடிப்படையில் பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளது.

SHARE