மூன்று மொழி படத்தில் தன்ஷிகா 

381


 ஒரே நேரத்தில் மூன்று மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார், தன்ஷிகா. இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் நல்ல வாய்ப்புகள் இப்போது கிடைத்துள்ளது. ‘விழித்திரு’ ஷூட்டிங் முடிந்தது. இதில் குப்பத்துப் பெண் வேடம். ‘திறந்திடு சீசே’ சஸ்பென்ஸ் த்ரில்லர். நான், நாராயணன், புரொடியூசர் ஸ்டாலின் என 3 பேர் சம்பந்தப்பட்ட படம். ஒரு ‘பப்’பில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. ‘காத்தாடி’ படத்தின் ஆக்ஷன் ஹீரோயின். அடுத்து, சமுத்திரக்கனி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் உருவாக்கும் ‘கிட்ணா’ படத்தில் நடிக்கிறேன். 4 கெட்டப்புகளில் நடிக்கிறேன். அடுத்து ஒளிப்பதிவாளர் டேனி இயக்கும் ‘மால்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இது தெலுங்கிலும் உருவாகிறது. ஆங்கிலப் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதிக படங்களில் நடிப்பது போல் தெரிந்தாலும், கால்ஷீட் பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறேன்.

 

SHARE