மெக்சிகோ அருகே 44 டன் மரிஜுவானா பறிமுதல்

623
மெக்சிகோ அருகே உள்ள டிஜுவானாவின் சாண்டியாகோ எல்லைப்பகுதியில் 44 டன் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டதாக அந்நகரத்தின் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.

அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 4000 பாக்கெட்டுகளில் இந்த போதைப்பொருள் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது. அந்நாட்டு உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மெக்சிகோ ராணுவமும், டிஜுவானா காவல்துறையும் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த போதைப்பொருள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு மிக அருகே டிஜுவானா நகரம் இருப்பதால் இங்கு மரிஜுவானா போதைப்பொருளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் டிஜுவானாவில் 148 டன் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE