மேற்கு வங்கத்தில் காதலை ஏற்க மறுத்த பெண் மீது நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தாய் பரிதாபமாக இறந்துள்ளார். 

456

images (2)

மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் வசித்து வரும் பருன் மஜூம்தர் என்ற நபர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

இவர் நாடியா மாவட்டத்தின் பிபுலபுரியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பல நாட்களாய் ஒரு தலையாக காதலித்துள்ளார்.

ஆனால் இவரின் காதலை அப்பெண் நிராகரித்து வந்ததால் ஆத்திரமடைந்த பருன், பெண்ணின் வீடு புகுந்து சராமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.

இதில் அப்பெண்ணும் அவரது தாயரும் குண்டடிப்பட்டு படுகாயமடைந்தனர்.மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது தாயரின் உயிர் பிரிந்தது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணை தாக்கிய பருனை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE