உலகக்கிண்ணத் தொடரின் முதல் லீக் போட்டியான இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதலின் போது ஒருவர் மைதானத்தில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிறகு அதிகாரிகள் அவரை துரத்தி பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
விருது வென்ற மலிங்கா, ஹேரத்
இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா, ஹேரத், இந்தியாவின் ரோஹித் சர்மா, அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் ஆகியோருக்கு 2014ம் ஆண்டுக்கான `இஎஸ்பின் கிரிக்இன்போ’ விருதுகள் வழங்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவை எச்சரித்த பொண்டிங்
இந்திய கிரிக்கெட் அணி அபாயகரமான அணி. அந்த அணியில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் எச்சரித்துள்ளார்.
சச்சினுடன் டின்னர்
வருகின்ற 26ம் திகதி மெல்போர்னில் தனியர் ஹொட்டலில் சச்சினுடன் ‘டின்னர்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் 12 பேர் சச்சினுடன் ஒரே ‘டேபிளில் ’அருகில் அமர்ந்து இரவு விருந்து சாப்பிடலாம். இதற்கு ஒவ்வொருவரும் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் வீரர்
கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்களான சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் ஜெயில் தண்டனை அனுபவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியார் கானை சந்தித்த சல்மான் பட், ‘ஸ்பாட்–பிக்சிங்’ எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.