மொயீன் அலி ஓய்வு பெற வாய்ப்பு

88
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.
பங்களாதேஷில் டி20 தொடரில் விளையாடி வரும் மொயீன் அலி ஒரு பேட்டியில் கூறியதாவது :
எனக்குப் பல லட்சியங்கள் கிடையாது. ஆனால் உலகக் கிண்ண போட்டிக்கான அணியில் இடம்பெறவும் கிண்ணத்தை வெல்லவும் விரும்புகிறேன். அதன்பிறகு பார்க்கலாம். இதனால் நான் ஓய்வு பெறுவேன் என்றோ ஓய்வு பெற மாட்டேன் என்றோ கூறவில்லை. 35 வயதில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் என்பதே மிகப் பெரியது. ஏதாவது ஒரு சமயத்தில் இது போதும் என நான் நினைக்கலாம். ஓய்வு பற்றி நான் முடிவெடுக்கவில்லை.
ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்துள்ளேன். புதிய வீரர்கள் அணிக்கு வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அணிக்கு எது முக்கியமோ அதைச் செய்ய வேண்டும். அதுவே நம்மை உலக செம்பியனாக மாற்றும். டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றார்.
SHARE