மொஹமட் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதன் பின்னர், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்தியாவின் சந்தேகம் வலுத்திருந்தது

510
இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதன் பின்னர், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்தியாவின் சந்தேகம் வலுத்திருந்தது.

இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானிய தீவிரவாத மற்றும் புலனாய்வு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறித்து இந்தியா கடும் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இந்தியா நேரடியாக இலங்கைக்கு தமது கண்டனத்தை விரைவில் வெளிப்படுத்தும் என்றும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE