மோடியை அலற வைத்த ஹீரோக்கள் (காமெடி பஜார்)

693

 

அப்பாடா…ஒரு வழியா எலக்சன் முடிஞ்சுது, ஓட்டு போடுவது நம் கடமைன்னு சொன்ன, பல பேர் விரல்ல மை வச்ச போட்டோவ “பேஸ்புக்”, “ட்விட்டர்” ல போஸ் கொடுக்குறதுக்கு தான்பா ஓட்டே போட்டு இருக்கானுங்க..

அது எங்க வீட்டு பக்கத்துல இருக்க சின்ன பையன் ஒருத்தன் சிவப்பு மை, பச்சை “மை”ய கைல வச்சு காட்டிகிட்டு இருக்கான்…அது கூட பரவா இல்லைங்க மை எனக்கு வைக்க மறந்துட்டானுங்கனு வெறும் விரல காட்டிகிட்டு இருக்கானுங்க…

சரிங்க இப்ப விஷயத்துக்கு வருவோம், எலக்சன் முன்னாடி, மோடி அவர்கள் ஏதோ சின்ன பசங்க மாதிரி “நா அந்த நடிகரை பாக்கணும், இந்த நடிகரை பாக்கணும்”னு எல்லாரையும் போய் பார்த்தார். அப்படி அவர் போய் பார்த்த நடிகர் + நம் கற்பனையில் சில நடிகர் இருந்தால் அவர்கள் என்ன பேசியிருப்பார்கள்…அந்த நடிகர்களின் கோரிக்கை என்னவாக இருக்கும்????? (இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல, வயிறை புண்படுத்தும் நோக்கம் மட்டுமே)

ரஜினி

தலைவர் கடந்த முறை இமயமலைக்கு சென்ற போது அங்குள்ள சித்தர் ஒருவர் ரஜினிக்கு 7 வரம் கொடுத்து இருக்கிறார், அவர் அந்த 7 வரத்தில் 6 முறை அதை “கோச்சடையான்” ரிலிஸ்க்கே பயன் படுத்தி விட்டார். மீதம் இருந்த ஒரு வரத்தை எப்படியோ நம்ம மோடியின் உளவுத்துறை அவர் காதில் போட, “வாங்குடா.. ராம்ராஜ் சில்க்ஸ் வேட்டிய..” என நம்ம ட்ரென்ட்லையே ரஜினி வீட்டுக்கு வந்தார்..

மோடி: ரஜினி உங்க கிட்ட 7 வரம் இருக்குனு கேள்வி பட்டேன், இப்ப உங்களிடம் 1 வரம் தான் இருக்காம், அதுவும் எனக்கு தெரியும். அந்த வரத்த வச்சு இனி 30 வருஷத்துக்கு நா தான் பிரதமர் அப்படின்னு சொல்லுங்க..

ரஜினி: ஐயா…மன்னிக்கணும், அத எப்பவோ எங்க “அம்மா”க்கு கொடுத்துட்டேன்..பால் வருது சாப்ட்டு கிளம்புங்க..

மோடி: ரஜினி என்ன பத்தி உங்களுக்கு தெரியாது…

ரஜினி (கோபமுடன்): ஹிம் கதம் கதம்..

அவர் பாபா சிம்பல் காட்ட மோடியின் கண்ணில் கண்ணிர்…என்னானு பார்த்த ரஜினி சிம்பல் காட்ரேன்னு மோடி கண்ண குத்திட்டார்..ஆனால் இதையே மோடி ஆயதமா கையில் எடுக்க, ரஜினியின் மனம் இறங்கியது.

ரஜினி: ஐயா!! என்ன மன்னிச்சுருங்க…தப்பு என் பக்கத்துல இருக்கு உங்க கண்ண குத்தி அழ வச்ச காரணத்துக்காக உங்களுக்கு நா சப்போட் பண்றேன்..ஆனா எனக்குன்னு சில கோரிக்கை இருக்கு, அத நீங்க செய்யணும்.

(என்று சொல்ல ஆர்வமா மோடி கேட்கிறார்…ரஜினி சொல்லி முடித்த பிறகு பால் கூட சாப்பிடாமல் கிளம்பிவிட்டார் மோடி) அப்படி என்ன கண்டிசன்??? இதோ…

1) பாபா பார்ட் 2 எடுக்கணும், அத நீங்க தான் தயாரிக்கணும், அப்படியே கோச்சடையான் பார்ட் 2 எடுக்க போறோம் அதையும் நீங்க தான் தயாரிக்கணும் அதுவும் அனிமேசன்ல தான் எடுப்போம் மேலும் என் மகள் சௌந்தர்யா தான் எடுப்பார்.

2)கோச்சடையான் ஹிந்தில நீங்க தான் வெளியிடனும்.

இப்ப புரியுதாங்க மோடி ஏன் பால் சாப்பிடாம போனார் என்று ..

விஜயகாந்த்

மோடி ரஜினி சொன்ன கண்டிசனுக்கு மூட் அவுட் ஆகி நெக்ஸ்ட் அவர் மீட் பண்ண போறது நம்ம கேப்டன். (பாவம் அவர பத்தி மோடிக்கு தெரில, வேலில போற ஓனான வேட்டிக்குள் போடப்போகிறார்).

வீட்டுக்கள் நுழையும் போதே நம்ம கேப்டன் தன் பருவ காலத்தில் இருந்து கடைசியாக நடந்த காஷ்மீர் போர் வரை தான் பிடித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் எடுத்த போட்டோவை நுழைவு வாயிலில் மாட்டி வைத்திருந்தார்….இதை கண்ட மோடி நாம் ஒரு விடுதலை போராட்ட வீரன் வீட்டிற்கு வந்துள்ளோம் என கண் கலங்கி உள்ளே நுழைந்தார்.( ஹா ஹா!!! மோடி நம்ம வடிவேலு நடித்த “இம்சை அரசன்” படம் பாக்கல போல “வரலாறு மிக முக்கியம் அமைச்சரே” என்று சொல்வது போல் தற்போது உள்ள போட்டோஷாப்பில் செய்தது)

மோடிக்கும், கேப்டனுக்கும் இடையே “ட்ரான்ஸ்ஸ்லேட்டர்” ஒருவர் அமர்கிறார். பாவம் அவர் நிலைமை தான் .

கேப்டன்: இந்தா புள்ள ஐயாக்கு தண்ணி கொண்டு வா (பழக்க தோசத்தில் அவர் கேப்டன் சாப்பிடும் “தண்ணியை” கொண்டு வர) ஏண்டா அறிவு இருக்கா நானே நைட் சாப்பிட வச்சுருந்த அத இப்ப கொண்டு வர(தன் லெப்ட் கால்ல அவன் ரைட் கன்னத்துல ஒரு உதை) இப்ப சொல்லுங்க டாடி என்ன சாப்புரிங்க …

வேலைக்காரன்(அவர் ஒரு எம்எல்ஏ): ஐயா!! அவர் பெயர் மோடி..

கேப்டன்: அது எனக்கு தெரியாதா…இல்ல எனக்கு தெரியாதா (அவனுக்கு ஒரு பேக் கிக்)

மோடியை பேச சொல்லிட்டு கேப்டனே 20 பக்க டயலாக்கை பேசி முடித்ததால் மோடிக்கு வந்த ட்ரான்ஸ்ஸ்லைடர் தலைச்சுற்றி கீழே விழுந்தார். மோடி நிதான நிலைமைக்கு வந்தவுடன்…

மோடி: விஜயகாந்த் பாய் !!!!

கேப்டன்: கோபமுடன்!!! ஏய் எனக்கு மதம் மேல நம்பிக்க இல்ல..நா பொறந்தது ஒரு இந்துக்கு, வளந்தது இஸ்லாமியர் வீட்டில், என்ன படிக்க வச்சது ஒரு கிறிஸ்துவர் (என்னது கேப்டன் படிச்சாரா???!!!!!) நா “நேதாஜி” இருக்குறதும் “சுபாசந்திரபோஸ்” இருக்குறதும் நீங்க பேசற வார்த்தையில் தான் இருக்கு.

உடனே அருகில் இருந்த ஒரு அடிமை “ஐயா அந்த இரண்டு பேரும் ஒரே ஆள் தான் என்று அவன் சொல்ல..அது எனக்கு தெரியாதா !!!என்று சொல்லி பக்கத்தில் இருந்த சோபா செட்டில் கால் வைத்து அவன் சில்லி மூக்கு உடைய ஒரு கிக்.

(மரண பயத்துடன்) மோடி : ஒகே ஜி, உங்களுக்கு என்ன தேவையோ அத நான் பண்றேன்….”ஆப் கி பார் மோடி சர்க்கார்” இது தான் நம்ம ஸ்லோகன். என்று நேரடியாக கிளைமாக்ஸ் வந்தார்.

கேப்டன்: ஆஃப், ஆ பார்ரா !!!! கண்டிப்பா நா உங்களுக்கு சப்போட் பண்றேன்.ஆனா எனக்கு சில கண்டிசன் இருக்கு அத நீங்க தான் நிறைவேத்தனும்…

அவை பின் வருமாறு

1) தோனிய கேப்டன் பதவிய விட்டு தூக்கனும், இனிமே இந்தியாவே என்ன மட்டும் தான் கேப்டன்னு சொல்லணும்.

2) ஒயின் ஷாப் எல்லாம் இரவு 2 மணி வரைக்கும் துறக்க வேண்டும், அதுவும் பண்டிகை காலங்களில் “டே நைட்” இருக்கணும்.

3) ஒபாமாவ நாட்ட விட்டு தள்ளி வைக்கணும்.(மோடி மைண்ட் வாய்ஸ் “நம்ம எதுக்குயா அவரே தள்ளி வைக்கணும்”)

4) என் மகன் நடிக்கிற “சகாப்தம்” படத்தோட பிரிமியர் ஷோ பாத்துட்டு படம் நல்ல இருக்குனு பார்லிமென்ட்ல சொல்லணும்.

எல்லா தீர்மானத்திற்கும் ஒரு மனதாக ஓகே சொன்ன மோடி, ஆனால் 4வது கண்டிசனால் மரணபீதியில் இருந்து வெளில வரல

டிஆர்

அடுத்து யாருயா??? என்று மோடி கேட்க, உதவியாளர் ஐயா இவர் தான் டிஆர் என்று சொல்லி முடிப்பதற்குள்…

டிஆர்: சார் நீங்க தானே மோடி …நா தான் சிம்புவோட டாடி (என்று சொல்லி அறிமுகம் படுத்தி கொண்டார்).

மோடி செம்ம மூட் அவுட்டில் இருக்க அவர் உதவியாளர் கேட்கிறார்.

உதவியாளர்: ஹெலோ மிஸ்டர்.டிஆர்??

டிஆர்: ஆமாண்டா…நா தாண்டா டிஆர்ரு அத கேட்க்க நீ யாரு, என் பையன் பேரு தான்டா சிம்பு என் கிட்ட காட்டாத வம்பு…ஹாஸ்பெட்டல் போன கொடுப்பாங்க பில்லு, என் கிட்ட காட்டாத லொள்ளு…

மோடி மட்டும் இல்லாமல் இப்போ வந்த உதவியாளரும் டயர்ட் ஆகி விட்டார்…சுமார் 4 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் டிஆர் பேச்சு “ஓன் வே”வாக இருந்தது.

டிஆர்: மோடி நீங்க நிக்க போறது வாரணாசி, இந்த தாடி நிக்க போறது வந்தவாசி

டீலா? நோ டீலா?

என்று கேட்க போய்ட்டு வரேன்னு சொல்லாம ஓடிட்டாரு மோடி.

சத்யராஜ்

மோடியே இந்த தேர்தல்ல நிக்கலாமா இல்ல வேணாமானு ஒரு முடிவுக்கு வந்து, வெறுத்து போய் அப்படியே திரும்புனா நம்ம “புரட்சி தமிழன்” சத்யாராஜ் வீடு…உடனே மோடியின் உதவியாளர் வீட்டிற்கு உள்ளே கூட்டிட்டு போக 6 அடியில் ஒரு உருவம் வந்து நின்றது.

மோடி: ஹெலோ மிஸ்டர்.சத்யராஜ்

உடனே ஒரு குரல் “அங்கிள் நான் சிபி ராஜ் எங்க டாடி தான் சத்யராஜ்” என்று சொல்ல அடுத்த வினாடியே சத்யராஜ் வர

சத்யராஜ்: “என்னமா கண்ணு” சௌக்கியமா?? (என்று அவர் ஸ்டைல்லையே சொல்ல, மோடியும் அவருக்கு வணக்கம் சொல்ல விஷயத்தை விவரமாக கேட்டார் சத்யராஜ்).

நா உங்களுக்கு வாய்ஸ் கொடுக்கனுமா?? என் வாய்ஸ்ச இங்க யாரு கேட்க மாட்றாங்க..சரி விடுங்க யா…நீங்க வேணா குஜராத்ல “சிஎம்” க்கு நில்லுங்க, ஆனா எம்ஜிஆர் தான் பிரதமரா நிக்கணும் ஓகே வா??

மோடி (மைண்ட் வாய்ஸ்): எம்ஜிஆர்!!!!! சோ சேட் !!!!

சத்யராஜ்: சரி அத விடுங்கையா என் பையன் சிபிராஜ் பாலிவுட்டில் நடிக்கணும், அதுவும் சோனம் கபூர் தான் ஹீரோயின்னா நடிக்கணும்.

சொல்லி முடிப்பதற்குள் விட்டாலாச்சாரியார் படத்தில் வருவது போல் “டங்” என்று மறைந்து விட்டார்.

கார்த்திக்

மோடி ஒன்றும் புரியாமல் நடந்து வர “நவரச நாயகன்” கார்த்திக் பேனரை பார்த்தார் (அவர் வீட்டிற்கு மட்டும் மனதை கல்லாக்கி கொண்டு உள்ளே போகிறார்).

வேலைக்காரன்: ஐயா!!!உங்கள பாக்க மோடி வந்துருக்காரு….

கார்த்திக்: ஹே யு!! என்ன பத்தி உனக்கு தெரியாது நா எந்த லேடியும் இப்ப பாக்குறது இல்ல…

வேலைக்காரன்: ஐயா!!! வந்து இருக்குறது மோடி..

கார்த்திக்: சாரி சாரி …ஹெலோ மிஸ்டர்.மோடி யு ஹே ஹொவ் எப்படி ஔ ஹே..

என்று தான் கடைசி வரைக்கும் பேசினார், என்ன பேசினார் என்று கடைசி வரைக்கும் புரியவே இல்லை.

மோடி: நா ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வரேன்…உங்களுக்கு எத்தன தொகுதி வேணும்?

கார்த்திக்: எனக்கு 45 வேணும் (இருக்குறதே 40 தான்) ஹே அவ் அது நா தான் தமிழ் நாட்டு பிஎம் நிப்பேன்.

மோடி: சார் அதல நிக்க முடியாது சார்…(அவருக்கு என்ன சொல்றதுனே புரில)

கார்த்திக்(கோபமுடன்): மனுஷனாய நீ ….எங்க ஆத்தா அப்பவே சொன்னுச்சு (என அவர் ஸ்டைலையே அழுக ஆரம்பித்து விட்டார்)…..

மோடி தலையில் கையை வைத்து அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

“பாவம் அவுரே கன்பியுஸ் ஆய்டுப்பாறு”…இப்ப தெரியுதா மோடி சார் 1 நாளுக்கே அழுகீரிங்க நாங்க பல வருஷமா இந்த ஹீரோஸ தான் பேஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்…பாத்திகளா தமிழனோட திமிர.. ”

 

SHARE