இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் பணியகத்தில் பணிகளைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதையடுத்து வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து வருகிறார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இன்று முற்பகல் 10.30 மணியளவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.