யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை ஒருவரை காணவில்லை

524

யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

நேற்றுக் காலை தொண்டைமானாறு காட்டுப்புலம் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லையென சகோதரன் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

SHARE