யாழ். மேயர் மோடி பதவியேற்புக்கு ஜனாதிபதியுடன் செல்கிறார்அரசிற்கு வக்காளத்து வாங்குவதற்கு என மக்கள் விசனம்

506
news_2009_10_images_newsmahinda

இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி அவர்களுடைய பதவியேற்பு வைபவத்தில், இலங்கையின் வடமாகாணத்தில் இருந்து யாழ் மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷச அவர்கள் அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டிருக்கின்றார்.

ஜனாதிபதியின் தலைமையில் செல்லவுள்ள குழுவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாகியஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) சார்பில் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களுக்கும் இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு வரப்பிரசாதமாகவே இந்த அழைப்பை தான் கருதுவதாக பிபிசி தமிழோசையிடம் குறிப்பிட்ட யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் மாநகர சபையின் மேயராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், வடமாகாண மக்களின் அபிலாஷைகள், அரசியல் உரிமைகள் தொடர்பில் இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது, இலங்கை அரசாங்க குழுவுடன் இணைந்து வெளிப்படுத்தவுள்ளதாக கூறினார்.

இத்தகைய சந்தர்ப்பம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதனை அவர் தவறவிட்டு விட்டார் என்றும் குறிப்பிட்டார்.

வடமாகாண மக்களின் சார்பில் மாநகர சபை மேயரிலும் பார்க்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் குழுவில் கலந்து கொண்டிருக்கலாம் அல்லவா என கேட்டதற்கு, யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நாளை நடைபெறுவதற்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முக்கியமாக அதில் கலந்து கொள்ளவேண்டியிருப்பதனால், அந்தச் சந்தர்ப்பம் தனக்கு வழங்கப்பட்டிருப்பதாக யோகேஸ்வரி தெரிவித்தார்.

 

SHARE