யுத்தத்தைக் கே.பி தான் தோற்கடித்தார். கே.பி இல்லாவிடில் புலியின் தோல்வியை நினைத்தும்பார்க்க முடியா-மகிந்த ராஜபக்ஷச

553

 

LTTE.kp-01

கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது டீ.பி.எஸ். ஜெயராயா என்ற ஏகாதிபத்திய ஏஜண்டும் படு பிற்போக்குவாதியுமான ஊடாகவிலாளர் கே.பியைச் செவ்விகண்டபாணியில் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டு பத்திரிகைளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த டி.பி.எஸ்.ஜெயராஜா யுத்த காலங்களில் இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகளோடு உறவு வைக்கவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சித் தயாரிப்பு ஊடகமான பிபிசி க்கு செவ்வி வழங்கவும் திரு.ஆனந்தசங்கரியின் மரணசாசனத்தை வைத்திருக்கவும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியரான ராயன் கூல்லோட அன்னியோன்னியம் கொள்ளவும் இன்று கே.பியோடு தொடர்பு கொள்ளவும் வல்லவராக உள்ளார்.

இதிலிருந்தே கே.பி யோடான செவ்வி எந்த எதிர்கால அரசியற் தயாரிப்புக்காக மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டது என்பதை விளக்கும்.

அதன் நோக்கம் கே.பியைத் தமிழ் மக்களின் அரசியற் தலைவராக நிர்மாணிப்பதுதான் என்பது இலகுவில் விளங்கக் கூடியது. பழைய காலனித்துவ நாடுகளில் அரசியற் தலைவர்கள் அவர்களின் கெட்டித்தனத்தாலோ தியாகத்தாலோ அறிவியல் மேதாவிலாசத்தாலோ உரிமைப்போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்குகொண்டு மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து பெற்ற வெகுஜன அங்கீகாரத்தால் மாத்திரம் உருவாகி விடுவதில்லை. அவர்கள் காலாவாதியாகிப்போன முதலாளித்துவ ஆட்சி அமைப்பு முறையை ஏற்றுக்கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு ஊசலாடாமல் சேவகங்செய்ய ஒத்துக் கொண்டால் மாத்திரம்தான் அவர்கள் அரசியல் வானுக்குப் பிரசித்தப் படுத்தப் படுவார்கள். கே.பி.யைத் திடீரென்று தமிழ் அரசியல்வானுக்கு அறிமுகப் படுத்திய நோக்கம் இதுதான்.

கே.பியும் ஏன் புலி இயக்கமும் ஏகாதிபத்திய கைப்பாவைகள்தான் என்பது எவருக்கும் விளங்கும். பெரும்பான்மையான தமிழ்மக்கள் தாங்களாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் என்று சொல்வதில் பெருமை அடைவதால் புலியும் கே.பியும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடியாக இருப்பது ஏதும் புதுமையல்ல.

அது மாத்திரமல்ல புலிசார்பு தமிழ்மக்களின் அற்புதபுத்தி என்னவென்றால் சிங்களவர்கள் சோஷலிசத்திற்காகப் போராடவேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள். அப்பொழுதுதான் சோஷலிசவிரோத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தமிழீழம் எடுக்கலாம் என்ற சாணக்கியம் தெரிந்தவர்கள்.

அப்படி இல்லாவிடில் புலியை இவ்வளவு காலத்திற்குத் தமிழ்மக்கள் சகித்திருக்க மாட்டார்கள்.

பிரச்சனை என்னவெனில் ராஜபக்ஸ்ச ஏகாதிபத்திய ஏஜண்டா அன்றேல் ஏகாதிபத்திய விரோதியா என்பதுதான். இதை முடிவெடுப்பது இப்பொழுதெல்லாம் மிக இலகுவாகும். இன்றய அரசியலை ஈறாக் ஆபுகானிஸ்தான் என்ற தொலைநோக்கு வில்லைகளின் மூலம் பார்க்காதவர்கள் எல்லோருமே ஏகாதிபத்திய முண்டுகள் என்ற முடிவுக்கு இலகுவாகவே வந்து விடலாம்.

இந்தாபிடி யூகோஸ்லாவியா மிலோசோவிச் மாதிரி ஜனாதிபதி ராஜபக்ஸ்சவையும் சர்வதேச நீதி மன்றம் அள்ளிக் கொண்டுபோகப் போகிறது என்று கூப்பாடுபோட்ட தமிழர்கள் எல்லாம் ராஜபக்ஸ்ச ஐ.நா கூட்டத்திற்கு வந்து போனதன் பின்பு வாயடைத்து இருக்கிறார்கள்.

‘எளியவன் பெண்டாட்டி எல்லார்க்கும் தோழி’ என்றது போல ராஜபக்ஸ்சவும் இந்தியாவுக்குக் கூட்டாளி, சீனாவுக்குக் கூட்டாளி, பாகிஸ்தானுக்குக் கூட்டாளி, றைஸ்சியாவுக்குக் கூட்டாளி, அமெரிக்காவுக்குக் கூட்டாளி, பாட்டாளிகளுக்குக் கூட்டாளி, முதலாளிகளுக்குக் கூட்டாளி.

‘எல்லாருக்கும் நண்பன் ஒருவருக்குமே நண்பன் இல்லை’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கு அருமையான எடுத்துக்காட்டு.

ராஜபக்ஸ்ச அமெரிக்க மற்றும் நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகள் நிபந்தனை ஏதுமின்றி ஈறாக்கையும் ஆபுகானிஸ்த்தானையும்; விட்டு வெளியேற வேண்டும் என்று இன்றுவரை கோராத ஏகாதிபத்திய விரோதியாகும். கே.பி பொட்டம்மான் சரணாகதி அடைந்த போதும் இன்று வரை இலங்கை அரசு புலிக் கொலைகளின் எந்தவொரு இரகசியத்தையும் வெளிவிடவில்லை என்பதை இலங்கை மக்கள் கவனிக்க வேண்டும்;. குறைந்த பட்சம் கோதாபாய ராஜபக்ஸ்ச கொலை முயற்சி, ராஜன் கதிர்காமர் கொலை, ரஜீவ் காந்தி கொலை போன்ற எந்த ஒரு இரகசியத்தையும் இன்றுவரை வெளிவிடவில்லை என்பதே புலியும் இலங்கை அரசாங்கமும் இலங்கை ஆயுதப் படைகளும் எந்த மட்டத்திற்கு உலக ஏகாதிபத்தியங்களோடு சேர்ந்து மூன்று தசாப்தமாக இலங்கையில் தமிழ் சிங்கள மக்களை மோதவிட்டு ஒருவரை ஒருவர் கழுத்தறுக்கவிட்டு மேய்ச்சுத் தண்ணிக்கு விட்டு இலங்கையின் சமூகநல அரசமுறையைத் துவாம்சம் செய்து ஏகாதிபத்தியங்களின் உபரி மூலதனங்களை நேரடியாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக மாற்ற முயற்சித்தார்கள்; என்;பது விளங்கும்.

மறுபக்கத்தில் ராஜபக்ஸ்ச அரசாங்கம் ஏதோ ஏகாதிபத்திய விரோத அரசாங்கம் என்றும் ராஜபக்ஸ்ச ஏதோ ஏகாதிபத்தியங்களின் எந்த நெருக்குவாரங்களுக்கும் பயப்படாமல் புலியைத் தொலைத்துக் கட்டினாரென்றும் தமிழ்மக்களிலே தம்மை இடதுசாரிகள் என்று சொல்பவர்கள் கூட இன்றுவரை ஓயாமற் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் முள்ளிவாய்க்கால் நரபலி வேட்டைக்கு முன்னதாக ஐ.நா செயலாளர் பான்கிமோனும் ஐ.நா துணைச்செயலாளர் விஜை நம்பியாரும் வந்து நேரடியாகத் தலையிட்டு பிரபாகரனையும் புலிகளையும் சரணாகதி அடைய ஊக்குவித்த செய்திகளைத் தமிழ்மக்கள் இன்றுவரை கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரனின் சரணாகதி வரலாற்றை அவரது சர்வதேச எஜமானர்கள் எப்பாடுபட்டும் மறைக்கப் பார்க்கின்றனர். றாயபக்ஸ்ச அரசாங்கமும் இன்றுவரை புலியின் இரகசியங்கள் எதையும் வெளிவிடவில்லை. பொல்பொட கொன்றவர்களின் மண்டையோடுகளை எடுத்து மலைபோல் குவித்துக் காட்டினார்கள். போல்பொட் கொன்ற மண்டையோட்டுக் குவியல் 30000 என்றே கருதப் படுகிறது. புலி கொன்ற மண்டையோடுகளையெல்லாம் அரசாங்கமே தேடி எடுத்து எரித்துவிட்டது. புலியின் சித்திரவதைச் சிறைகளைக்கூட அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் காட்டாது மறைத்துவிட்டது. அப்படி அந்த வதை முகாங்களையும் கொல்லப்பட்ட தமிழர்கள் மண்டையோட்டுக் குவியல்களையும் தமிழ் மக்களுக்குக் காட்டியிருந்தால் இன்று புலியும் இல்லை. .பூனையும் இல்லை.

நாடு கடந்த தமிழீழமும் இல்லை. காடுகடந்த தமிழீழுமும் இல்லை. தமிழ்மக்கள் புலிக்கெதிராகக் கெம்பி எழுந்திருப்பார்கள்.
விசித்திரமான கேள்வி யொன்றுண்டு. இருவருக்குத் தெரிந்த இரகசியத்தை எப்படிக் காப்பாற்றலாம். விடை: ஒரேயொரு நிபந்தனைக்குள் மட்டும்தான் காப்பாற்றலாம். இரகசியம் தெரிந்த இருவரில் ஒருவர் இறந்தால் மட்டும்தான் காப்பாற்றலாம்.
புலியும் புலிப் பாசிசக் கும்பல்களும் வெள்ளைக் கொடியோடு பரிவாரம் புடைசூழ சரணா கதி அடைந்ததை நூறல்ல ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கண்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான இலங்னைப் படைகளைச் சேர்ந்தவர்கள் கண்டிருக்கிறார்கள். அது பலபேருக்குத் தெரிந்த பரம ரகசியம்.

அண்மையில் கே.பியோடு இலங்கைஅரசாங்கம் நன்நெறிபிறழ்ந்து மணம் செய்தததை சிங்களவர்கள் எல்லோருமே எதிர்த்தார்கள். அதைச் சமரசப் படுத்து முகமாக சிங்கப்பூர் பல்லகளைக் கழகத்தில் பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவரும் புலிகளின் முழு இரகசியங்களும் தெரிந்தவர் என்று கருதப்படுபவரும் சிங்கப்பூரில் பயங்கரவாதம் பற்றி பிறநாட்டவருக்கு விரிவுரை எடுப்பவருமான ஒரு சிங்களப் பேராசிரியர் சொன்னாராம,; புலிகளைக் கேபி என்ற தனிமனிதான் தோற்கடித்தார்.

புலிகளைப் பலவீனப் படுத்திய கருணாவுக்கு மந்திரிப் பதவி கொடுக்கலாமென்றால் ஏன் கே.பியை ஏற்றுக் கொள்ளக் கூடாது. கே.பி பில்லியன் கணக்கான டொலர்களை நிர்வகித்த அனுபவமுடையவர். இலங்கை மத்திய வங்கி முகாமையாளர்கூட இவ்வளவு தொகையை நிர்வகித்தது கிடையாது. அது மாத்திரமல்ல தசாப்தங்களாக புலம்பெயர் தேசங்களில் உள்ள லட்சக் கணக்கான படித்த தமிழர்களை ஆழுமை செலுத்திய ஒரு மனிதர். இரு என்ற இடத்தில் இருத்தி எழும்பு என்ற இடத்தில் எழுப்பிய மனிதர்.

இதிலிருந்தே தெரியும் இலங்கையின் உள் நாட்டு யுத்தத்தை இலங்கை அரசாங்கம் தோற்கடிக்க வில்லை என்பது. யுத்தத்தை அரசாங்கம் நாடாத்தினால் அல்லவோ அரசாங்கத்தால் தோற்கடிக்க முடியும். யுத்தத்தைப் புலியும் நடாத்தவில்லை. அரசாங்கமும் நடாத்த வில்லை. சர்வதேச ஏகாதிபத்திய எஜமானர்கள் புலியையும் அரசாங்கத்தையும் மூன்று தசாப்தமாக கைப்பாவையாக ஆட்டிப்படைத்தார்கள். எவ்வளவு அழிவு வந்தாலும் பறவாயில்லை. இலங்கையில் தேசியமயம், தேசிய மயமாக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்கள் , அரச உடமை, இலவசக்கல்வி, இலவச வைத்திய வசதி, தொழிற்சங்கப் போராட்டம் என்ற சொல்லே இருக்கக் கூடாது. இலங்கை பாட்டாளிகளின் நாடாக இருக்கக் கூடாது.

பண்டங்களைப் படைப்பவர்களின் நாடாக இருக்க வேண்டும். கடன்வேண்டும் நாடாக இருக்கக் கூடாது. வெளிநாட்டு நேரடி மூலதனத்தைக் கவர்ந்திழுக்கும் நாடாக இருக்க வேண்டும்.

முழுயுத்த காலங்களிலும் இலங்கை அரசாங்கத்தை அரச உடமையானவற்றைத் தனியார்மயமாக்கும்படியும் நாட்டின் பொருளாதாரத்துறையைத் தாரளமயமாக்கும் படியும் தொடர்ந்து ஏகாதி பத்தியங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டே வந்தன. 1977 முதலாவது இனக்கலவரம் கூட கட்டுனாயக்காவில் சுதந்தர வர்த்தக நிலையத்தை ஏற்படுத்துவதற்கான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் அமுல்நடாத்தும் சூழலைப் பிறப்பிப்பதற்காகும்.

ராஜபக்ஷசவுக்கும் சரத்பொன்சேகவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதங்களைக் கவனித்தவர்களின் கூற்றுப்படி சரத்பொன்சேகா, தான்தான் வன்னியில் மழையிலும் வெய்யிலும் நின்று போராடினேன். நீங்கள் அதாவது கோதபாய ராஜபக்ஷ்ஷவும் மகிந்தா ராஜபக்ஷ்சவும் ;குளிர்சாதன அறைகளில் இருந்து கட்டளை பிறப்பித்தவர்கள் என்;ற வாதத்திற்கு விடையிறுக்கும்பொழுது ராஜபக்ஷ்ச சொன்னாராம் ‘யுத்ததத்தை நீ தோற்கடிக்கவில்லை. யுத்தத்தைக் கே.பி தான் தோற்கடித்தார். கே.பி இல்லாவிடில் புலியின் தோல்வியை நினைத்தும்பார்க்க முடியாதென்று’. அதற்கு விடையிறுத்த சரத்பொன்சேகா ‘அப்படியானால் நீங்கள் யுத்தத்தை வென்றதாக ஏன் கொண்டாடுகிறீர்கள்’ என்று கேட்டாராம்.

பிரச்சனை என்னவென்றால் கே.பியையும் இலங்கை அரசாங்கத்தையும் இணைத்துக் கையாண்ட எகாதிபத்திய எஜமானர்கள் யார்? உண்மையில் முப்பது வருடமாகப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் ஆயுதப் படைகளும் ஏகாதிபத்தியங்களின் விசுவாசம் மிக்க ஊழியர்களாக நூற்பாவைகளாகச் செயற்பட்டு மாறிமாறி சிங்கள தமிழ் சகோதரக் கொலைகளைச் செய்து எமது தேசத்தையும் நாசமாக்கினார்கள் என்பதுவே உண்மை.

முதலாளித்துவ அரசுகள் எல்லாமே ஒரு குடும்பங்கள் போன்றன. அவைகள் தங்களுக்குள் ஆயிரம் இழைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கிடையே சின்னச் சின்ன முரண்பாடுகள் எழுந்தாலும் தனிச்சொத்துடைமைக்கு ஆபத்துவரும் காலங்களில் அவர்கள் மிக வாஞ்சையோடு இணைந்து விடுவார்கள். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை நடாத்தியவர்கள் பான்கிமோன் விஜை நம்பியார் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய இந்திய சீன முதலாளித்துவங்கள் இணைந்தே நடாத்தின. இந்த நாடகத்தை வெளியில் கொண்டுவருவது ஏதும் கஷ்டமல்ல. கே.பியையும் கோதபாயா ராஜபக்ஸ்சவையும் யுத்தத்தின்போது கையிழந்து காலிழந்து நிரந்தர அங்கவீனர்களாகப் போன இராணுவத்தினரதும் மற்றும் கையிழந்த காலிழந்த நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களைப் பறிகொடுத்த, பலிகொடுத்த தமிழர்களதும் பகீரங்கப் பொது விசாரணைக்கு உட்படுத்தினால் இந்த உண்மை ஸ்தூலமாக வெளிவரும்.

ராஜபக்ஸ்ச ஒரு ஏகாதிபத்திய விரோதியானால்  ஏன் இந்த ஏகாதிபத்திய அடிவருடிப் புலியான கே.பியை இராஜபக்ஸ்ச அரசாங்கத்திடம் இந்த ஏகாதி பத்தியங்கள் கையளித்தன. ஒரு உலகம் அறிந்த பயங்கரவாதி ஒரு நாட்டின் பாதுகாப்பச் செயலாளர் வீட்டுக்குப் போன புதுமை இலங்கையில் மாத்திரம்தான் நடந்திருக்கிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாயா வீட்டிற்குச் சென்று கே.பி கேக் சாப்பிட்டு தேனீர் அருந்தியது மாத்திரமல்ல அவரை ஒரு நல்ல மனிதர் என்று நற்சாட்சிப் பத்திரமும் வழங்கியுள்ளார். மாற்றுக்குக் கோதபாயா ராஜ பக்ஸ்சவும் கே.பிக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி அவரைத் தமிழ் மக்களின் லட்சியத் தலைவராக்க முயற்சிக்கின்றார்.

கே.பியின் சொந்தக் கூற்றின்படியே கே பியைச் சர்வதேசப் பொலிஸ் கைது செய்யவில்லை. 2007 அளவில் கேபி சர்வதேச பொலிசால் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்திகள் சர்வதேச செய்தித் தாள்களில் வெளியானதைத் தமிழ் மக்கள் நன்கே அறிவர். பி.பி.சி போன்ற ஊடகங்கள் ஈறாக் யுத்தத்திற்கு முன்னர் ஈறாக்கில் பேரழிவுதரக் கூடிய ஆயுதங்கள் இருப்பதாகப் படம்காட்டிச் செய்தி வெளியிட்டபின்பே ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு ஈராக்குக்மேல் தொடுக்கப் பட்டது. அது போன்ற ஒரு சின்ன நாடகம்தான் கே.பியை சர்வதேசப் பொலீஸ் பிடித்த செய்தியாகும்.

ஆனால் கே.பி யின் சொந்தக்கூற்று சர்வதேசப்பொலிஸ் தன்னைக் கைது செய்யவில்லை என்பதாகும்.

இதோ கே.பி யின் செய்வியிலிருந்து:

‘உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.’

கே.பி கைது செய்யப்பட்டுவிட்டதாகத் தமிழ் மக்ளை ஏமாற்றிவிட்டு கே.பி.யின் முழுக் காட்டிக்கொடுப்புடனேயே பெருந் தொகையான மக்களை வன்னி நிலப்பரப்பில் ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசபடைகளைக் கொண்டு கொன்று குவித்தன. இலங்கை ராஜபக்ஸ்ச அரசாங்கமும் கே.பியோடும் மற்றும் உருத்திரகுமாரன் போன்ற உச்சியிலுள்ள புலிகளோடு உறவு ஏற்பட்ட பின்னர் கூட அந்த உண்மையச் சொல்லாமல், கிராமப்புறங்களிலிருந்து படைகளிற் சேர்ந்த பெரும்தொகையான இளைஞர்களைப் பலி கொடுத்தும் ஊனமாக்கியும் தேசத்தையும் நாசமாக்கி நாட்டையும் மீழாக் கடனில் ஆளாத் துயரில் அமிழ்த்தியுள்ளது.

போன ஜனாதிபதித் தேர்தலின்போது இன்னொரு அதிசயம் நடந்தது

இந்தியாவின் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஜனாதிபதி ராஜபக்ஸ்சவுக்கு வாக்குப் போடும்படி இலங்கை டெய்லி நியூசினூடு வேண்டுகோள் விடுத்தார்.

சனி, 16 ஜனவர ஜனதாக் கட்சித் தலைவரான சுப்பிபரமணியன் சுவாமி சிறிலங்காத் தமிழர்களைக் கோருவது என்னவென்றால் எதிர்காலத்தில் இந்தியா உங்களுக்கு அனுதாபமாக இருக்க வேண்டுமானால் நீங்கள் தமிழ் பேசும் சிங்களத் தலைவரான மகிந்தா ராஜகப்ஸ்சவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்குங்கள்.

சுப்பிரமணியம் சுவாமி அடிக்கடி அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் வந்து வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு ராஜபக்ஸ்ச அம்பநாந்தோடi;டத் துறை முகத்தை சீனாவுக்குக் கொடுத்துவிட்டார். அவர் ஏதும் சேட்டை விட்டால் அவரையும் படிப்பிப்போம் என்றது போன்ற தோறணையிலேயே அவரது கூற்றுக்கள் அமைந்திருப்பது வழக்கம்.

திடீரென்று ராஜபக்ஸ்சவுக்கு வாக்குப் போடச் சொல்கிறார். எந்த இந்திய அரசியல் வாதியும் சொல்லாத ஒன்றை அவர் சொன்னார். ஏன்? ஆர் இந்த சுப்பிரமணியம் சுவாமி. இலங்கைத் தமிழர்களுக்கு அவரது வரலாறு நன்றாகவே விளங்கும்.

றைஸ்சிய மாக்ஸ்சியத்தின் தந்தையான பிளெக்கானெவ் சொல்லுவார். பத்திரிகைகளில் வரும் கருத்தை மாத்திரம் வாசித்தால் போதாது. அ;தக் கருத்தைச் சொல்பவரின் வர்க்க மற்ற வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் .அது தெரிந்தாற்தான் அவர் எந்த த்த்துவார்த்த அரசியற் திசைக்கு உங்களை இழுத்துக் கொண்டு போவார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். முகவரி இல்லாத இணைய உலகத்திலே இந்தக் கூற்று மிக அவசியம் ஆனாது. புலிப் பாசிசம் ஒழிந்த இந்த நேரத்தில் இந்த வழக்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

2009 மே 17 க்கு முந்திய சில நாட்களில் ஐ.நா வின்துணைச்செயலாளர் விஜை நம்பியார் மற்றும் ஐ.நா செயலாளர் பான்கிமோன் இலங்கைக்கு வந்து நின்றார்கள். அவர் வந்த சமிக்ஞையே பிரபாகரன் வெள்ளைக் கொடியோடு சரணாகதி அடையும் நம்பிக்கை ஊட்டப்பட்டது. பிரபாகரனும் அவரோடு சேர்ந்த உச்சியிலுள்ள புலிப் பாசிசக் கும்பலும் வெள்ளைக் கொடியோடு சரணாகதி அடையச் சென்றதை அப்பொழுது வன்னியிலிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் கண்டிருக்கிறார்கள். அவர்களது சாட்சிகள் மெல்ல மெல்ல தமிழ் மக்களுக்கு வந்த சேர்ந்து கொண்டிருக்கின்றன.

அனேக சிங்கள சிப்பாய்களும் 57 வது படையணிச் சிப்பாய்கள் கூட தம்மோடு நெருங்கியவர்களுக்கு பிரபாகரன் சரணாகதி அடைந்ததைச் சொல்லி வருகிறார்கள்.

ஏகாதிபத்தியங்களும் ஏகாதிபத்தியத் திருடர்களின் குகையாக விளங்கும் ஐ.நாவும் புலியையும் இலங்கை அரசாங்கத்தையும் வௌ;வேறு விதமமாகக் கையாண்டு இந்த யுத்தத்தை நடாத்திக் கொண்டிருந்தனர். இந்த யுத்தத்தின் மத்தியிலேயே எகாதிபத்தியங்களும் ஐ.நாவும் சர்வதேசநாணயநிதியமும் இலங்கையில் பொருளாதார அமைப்புமுறையைத் தாரளமயமாக்கும்படி நிர்ப்பந்தத்தித்தன. ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளின்போதும் இந்த நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அரச உடைமையாக்கப்பட்ட நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதே உலக ஏகாதிபத்தயிங்களின் இலக்காக அமைந்திருந்தது. அதற்காகவே இந்த உள்நாட்டு யுத்தம் திட்டமிட்டு ஆத்திரமூட்டப்பட்டது.

2008 செப்டம்பர் 15 இல் அமெரிக்க லேமன் பிறதேர்ஸ் வங்கி திவாலானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வங்கிச் சரிவுகளின்போது மேற்கு நாடுகள் எல்லாமே வங்கிகளுக்கு ஏறத்தாள 14000 பில்லியன் டொலர்களை இறைத்து வங்கிகளைக் திவாலாக விடாமற் காப்பாற்றின. உலக மொத்த் உற்பத்தியின் கால்வாசிப் பங்கு பெறுமதியை கொடுத்துக் காப்பாற்றியதோடு தனியார் உடமை முறையே சொர்க்கமென்ற கருத்து திவாலாகவே இலங்கையிலும் தாராளமயமாக்கல் பிரச்சனை செல்லுபடியாகாதென்பதை அறிந்த ஏகாதிபத்தியங்கள் திடீரென்று இலங்கையில் யுத்தத்தை நிறுத்த முடிவெடுத்தன. அதுமாத்திரமல்ல மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தால் சிங்கள தமிழ் மக்கள களை களையென்று களைத்து வெறிதாகிப் போனார்கள். நாடும் மீளாக்கடனில் மூழ்கித் திவாலாகும் நிலைக்குத் தள்ளப் பட்டது. இந்தக் களைப்பும் யுத்தத்தை திடீரென்று முடித்தது.

யுத்த முடிவின்போது இலங்கை அரசாங்கத்தின்மேல் ஏதோ யுத்தக்குற்றம் சுமத்தப் போவதாக ஜெனிவாவில் நாடகமாடி ஜெனிவாவில் பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட போர்க்குற்றத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது போல் நாடகமாடி ஏகாதிபத்தியங்களும் அந்தத் திருடர்களின் பாதுகாப்புக் குகையான ஐக்கியநாடுகள் சபையும்; தமிழ் சிங்கள மக்களின் கண்களிலே மண்ணைத் தூவினார்கள். இந்தநாட்களில் இலங்கையின் பாதுகாப்பபுச் செயலாளர் கோதபாய இராஜபக்ஸ்சவும் யுத்தத்தை நாடத்திய ஜெனரல் சரத்பொன்சேகாவும் அமெரிக்கா சென்று திரும்பிய போதும் போர்குற்ற நடவடிக்கைகள் ஏதும் நடக்க வில்லை.

ஐ.நா உயர் அதிகாரிகளான பான்கிமோனும் விஜை நம்பியாரும் இலங்கைக்கு வந்தே பிரபாகரனை வெள்ளைக் கொடியோடு சரணடைய வைத்தனர். சரணாகதி நாடகத்தின்போது ஜனாதிபதி ராஜபக்ஸ்ச ஜோடனுக்கும் ஜெனரல் பொன்சேகா சீனாவுக்கும் சென்ற போது இன்று இலங்கைக்காக ஐ.நா. வில் ;இருக்கும் அன்றய 57 வது படையணித் தளபதியாக இருந்த மேயர் ஜெனரல் சாவேந்திர டீ சில்வாவும் கோதாபாயாவுமே மிக இரகசியமாகச் செயற்பட்டு பிரபாகரனின் வெள்ளைக் கொடியோடான சரணாகதி நாடகம் மேடையேற்றப்பட்டது. பிராபகரனிடம் மே 15 ந்தேதியே ஆயுதக் கிடங்குகளை வெடிவைத்துத் தகர்த்துவிட்டு வெள்ளைக் கொடியோடு சரணாகதி அடையும்படியே கட்டளையிடப்பட்டு பிரபாகரனும் அவரோடான பாசிசக் கும்பலும் வெளிநாடொன்றுக்கு அகதியாகக் கப்பலிற்போகும் ஆயத்தங்களுடனேயே கடவுச்சீட்டுகள் சாரங்கள் சகிதமே சரணடைந்தனர்.

பிரபகரன் போரிலே கொல்லப் படவில்லை என்பதை பிரபாகரனது படங்களை ஆய்வு செய்த சட்ட மருது;தவம் தெரிந்த தமிழ் சிங்கள வைத்திய கலாநிதிகளும் ஏன் மற்றும் எண்ணற்ற உலக வைத்திய மேதைகளும் சட்ட மேதைகளும் ஓய்பெற்ற நீதியரசர்களும் மீண்டும் மீண்டும் ஊர்யிதம் செய்கிறார்கள்.

TPN NEWS

SHARE