இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்செயல்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்து தனது நாட்டிற்கு திரும்பிய நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கமலேஸ் சர்மா பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியைமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பிரதம நீதியரசர் நியமனம், சிவிலியன்களை மாகாண ஆளுனர்களாக நியமித்தமை உள்ளிட்டன வரவேற்கத்தக்கவை எனவும் பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.