யுத்த நிறைவின் பின்னர் பல்வேறு புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் -இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய

500

யுத்த நிறைவின் பின்னர் பல்வேறு தரப்பினரும் பல்வேறு புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு மாறுபட்ட புள்ளி விபரத் தகவல்களை வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2011ம் ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உயிரிழந்த சிவிலியன்களின் எண்ணிக்கை 10000 மாக குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் உயிரிழந்த சிவிலியன்களின் எண்ணிக்கையை 40,000 மாக காண்பித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரதிஸ்டவசமாக இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் தரப்பினர் எவரும் அதற்கான ஆதாரங்களை இதுவரையில் சமர்ப்பித்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஜனவரி முதல் 2009ம்; ஆண்டு மே மாதம் 31ம் திகதி வரையில் யுத்தம் காரணமாக உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7896 என இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும் யுத்த சேத விபரங்கள் பற்றிய சரியான தகவல்களை இதுவரையில் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே இவ்வாறு குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென சில தரப்பினர் கோரி வருவதாக இராணுவப் பேச்சாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE