யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை !

271

 

சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடையும் என கூறப்பட்டதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை வருவதாக இந்தியா தெரிவித்தது.

குறித்த கப்பலின் வருகை குறித்து கவலை வெளியிட்ட இந்தியா, சீனக் கப்பலின் வருகையானது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரித்தது.

கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்ட குறித்த கப்பல், தற்போது தாய்வானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எவ்வாறாயினும் தமது அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் இதற்கு பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE