ரசனை மிகு படமாக அதிதி

601

இதில் நந்தா நாயகனாகவும் அனன்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, சென்றாயன், பேபியுவினா,சம்பத்ராம், காஜல் பசுபதி, இவர்களுடன் பாடகர் பிரசன்னா, இன்னொரு முக்கிய வேடத்தில் அஸ்வதிவர்ஷா நடித்திருக்கிறார்.

ஒரே ஒரு பாடல் கட்சியில் ரக்ஷனா மௌரியா நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் பரதனிடம் கேட்டோம்…“அதிதி” என்றால் சுத்தத் தமிழில் விருந்தினன் என்று பெயர். இளம் ஜோடிகளான நந்தா, அனன்யா வாழ்க்கையில அதிதியாக அதாவது அழையா விருந்தாளியாக நுழையும் நிகேஷ்ராம், அவர்களுக்கு என்ன மாதிரியான இடைஞ்சல்களைத் தருகிறான் என்பது கதை! ரசனை மிகு படமாக அதிதி உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெற்று முடிந்திருக்கிறது என்றார் பரதன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்க, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். இவர் விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியதுடன் கில்லி, தூள், மதுர, ஒஸ்தி, தில், வீரம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE