ரஜினிக்கு கமலின் மருதநாயகம் சவால்.

362

தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள் என்றால் அது ரஜினியும், கமலும் தான். ஒருவர் படத்தின் வசூலை மற்றொருவர் தான் முந்த வேண்டும், அந்த அளவிற்கு இவர்களுக்குள் சினிமா போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது.

தற்போது தமிழ் சினிமாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் எந்திரன் தான், வசூல் சாதனையிலும் இது தான் முதலிடத்தில் உள்ளது, இதற்கு அடுத்து கமலின் விஸ்வரூபம் இருக்கிறது.

கமலின் கனவுப்படமான மருதநாயகம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருப்பது அனைவருக்கும் தெரியும், தற்போது அதை புதுப்பிக்க நேரம் வந்துவிட்டது. இப்படத்தை தயாரிக்க ஒரு ஹாலிவுட் நிறுவனம் முன்வந்துள்ளதாம். சொன்னது போல் நடந்தால் இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாம்.

 

SHARE