ரஜினியின் மூன்று முகம் ரீமேக்: ஹீரோ விஜய், அஜீத்..? 

357
ரஜினி நடித்த மூன்று முகம் படம் ரீமேக்கில் நடிக்கபோகும் ஹீரோ தேர்வு நடக்கிறது. கடந்த 1982ம் ஆண்டு ரஜினி 3 மாறுபட்ட வேடங்களில் நடித்து வெளியான படம் மூன்று முகம். இப்படத்தை ஏ.ஜெகன்னாதன் டைரக்டு செய்திருந்தார். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். இதில் அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தது பிரபலம் ஆனது. இப்படம் திரைக்கு வந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆகிறது.சித்தார்த்&லட்சுமி மேனன் நடித்த ஜிகர்தண்டா படத்தை தயாரித்த கதிரேசன் இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளார்.

 

இதில் விஜய், அஜீத் இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ரஜினியின் தீவிர ரசிகர் விஜய். ரஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உள்ளது. அதேசமயம் ரஜினியின் பில்லா ரீமேக்கில் கடந்த 2007ம் ஆண்டு அஜீத் நடித்தார். அதைத் தொடர்ந்து பில்லா 2விலும் நடித்தார். எனவே மூன்று முகம் படத்திலும் அஜீத் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மூன்றுமுகம் படத்தில் ரஜினியின், அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. அந்த டைட்டிலில் சமீபத்தில் கார்த்தி நடித்தார். சிறுத்தை படத்திலும் கார்த்தியின் போலீஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது. எனவே கார்த்தியும், மூன்று முகம் ரீமேக்கில் நடிக்கலாம் என பரவலாக கூறப்படுகிறது. 3 ஹீரோக்களில் எந்த ஹீரோவுக்கு மூன்று மேக் அப் போட வாய்ப்பு காத்திருக்கிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்

 

SHARE