ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கிய பிரித்தானியா பிரதமர்!

12

 

உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்(Liz Truss) தெரிவித்துள்ளார்.

உக்ரைன்,ரஷ்ய போர் குறித்து ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்(Liz Truss) உறுதியளித்துள்ளார்.

மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் படைகளை திரட்ட ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) உத்தரவிட்டுள்ள நிலையில், உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை எனவும் லிஸ் டிரஸ்(Liz Truss) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE