ரஷ்யாவில் உள்ள ஆண்களுக்கு புடின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

12

 

ரஷ்யாவில் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் வெளிநாடுகள் செல்வதை தடுக்க அவர்களுக்கு விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

.இதையடுத்து, ஏராளமான ரஷ்யர்கள் வெளிநாடுகள் செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யத்தொடங்கியதால் சனிக்கிழமை வரை பல அண்டை நாடுகளுக்கு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

இதே நிலை தொடர்ந்தால் புடின்(Vladimir Putin) ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களை ராணுவத்தில் சேர்க்கவும், 6 மாத ராணுவ பணி நிறைவடைந்ததும், இந்திய மதிப்பில் சுமார் ஒன்னேகால் லட்ச ரூபாய் சன்மானத்துடன், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE