ரஷ்யாவுக்கா… மொத்தமாக மறுத்த வடகொரியா

169

 

உக்ரைனில் நடக்கும் போரின் போது ரஷ்யாவிற்கு எந்த ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்யவில்லை என்றும், அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் வடகொரியா கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல் அனைத்தும் அமெரிக்க உளவுத்துறையால் பரப்பப்பட்டது எனவும், வடகொரியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சூழ்ச்சி இதுவெனவும் வடகொரியா கொந்தளித்துள்ளது.

வியாழக்கிழமை ஊடகங்களை சந்தித்த வடகொரிய அதிகாரி ஒருவர், அமெரிக்கா இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தடைகளை வடகொரியா மதிக்க தயாராக இல்லை எனவும், அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் கட்டாயத்தால் தங்கள் நாடு மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வதும் அதுபோன்று இறக்குமதி செய்வதும் இறையாண்மை கொண்ட அரசிற்குரிய சட்டபூர்வமான உரிமை என்றார். ஆனால் இந்த தருணத்தில் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறோம் என குறிப்பிட்ட அந்த அதிகாரி,

நாங்கள் இதற்கு முன்பும் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ததில்லை, அவற்றை ஏற்றுமதி செய்யவும் எங்களுக்கு திட்டமில்லை என்றார்.

இருப்பினும், நாட்டின் கிழக்கில் ரஷ்யாவிற்கு ஆதரவான பிரிந்து சென்ற பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கட்டுமானத் தொழிலாளர்களை அனுப்புவதில் வட கொரிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE