ரஷ்யாவின் பசுபிக் பிரிவின் மூன்று கடற்படை கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
ரியர் அத்மிரல் விளடீமீர் ஏ. திம்மித்ரிவ் தலைமையிலான இந்த ரஷ்ய கப்பல்களின் அதிகாரிகள் ஒய்வுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
மார்ஷல் ஷப்போசினிகேவ், இல்ருக்ட், பயான் ஆகிய கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படையின் மரபுகளுக்கு இணங்க வரவேற்றனர்.
மார்ஷல் ஷப்போசினிகேவ் என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக முதல் தர கப்டன் தகுதியை கொண்ட திமித்திரி வி.பஸ்சென்யூக் பணியாற்றி வருவதுடன் அந்த கப்பல் 162.8 மீற்றர் நீளத்தை கொண்டது.
7 ஆயிரத்து 595 தொன் எடை கொண்ட இந்த கப்பலில் 38 அதிகாரிகளும் 321 கடற்படையினரும் பணியாற்றி வருகின்றனர்.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள ரஷ்ய கப்பல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.
ரஷ்ய கடற்படையினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.