ராஜபக்ஷக்களின் அசுத்த ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் மக்களுக்கு நிவாரங்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். உழைக்கும் மக்களுக்கு விடிவினை ஏற்படுத்த சகல முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரக் கணக்கான துன்பியல் அனுபவங்களினால் உழைக்கும் மக்கள் உழலுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் உரிமைகயும் வரப்பிரசாதங்களும் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சாதாரண மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு நடாத்தக் கூடிய அளவிற்கான சம்பளம் கிடைப்பதில்லை எனவும் வாழ்;க்கைச் செலவு நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு அதிளவில் அந்நிய செலாவணி ஈட்டித் தரும் வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எவ்வித நலன்களையும் அரசாங்கம் வழங்குவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜபக்ஷ அசராங்கத்தின் அசுத்த ஆட்சிப் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமேன அவர் வலியுறுத்தியுள்ளார். நாளுக்கு நாள் தாய் நாட்டின் கீர்த்தி நாமம் சீரழி;க்கப்பட்டு வருவதாகவும் மீண்டும் நற்பெயரை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்