ராணி வேடம் கலைத்தார் அனுஷ்கா 

401நடிகை அனுஷ்கா ராணியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.டோலிவுட் பட இயக்குனர் குணசேகர் இயக்கும் படம் ‘ருத்ரம்மாதேவி. இது இவரது கனவு படமாக உருவாகி வருகிறது. ராணி வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டின் காகத்தியா அரச பரம்பரையின் கதையாக இது உருவாகிறது. ரானா, பிரகாஷ் ராஜ் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். கடந்த 1 வருடமாக நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. 3டியில் உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இளையராஜா இசை அமைக்கிறார். தோட்டா தரணி அரங்குகள் நிர்மாணித்திருக்கிறார். டைரக்டர் ராஜ்மவுலி இயக்கும் ‘மஹாபலி பட ஷூட்டிங்கில் தொடர்ந்து அனுஷ்கா நடித்து வருகிறார். இது சுமார் ஒன்றரை வருடத்துக்கு மேலாக ஷூட்டிங் நடந்து வருகிறது. தவிர ரஜினியுடன் ‘லிங்கா, அஜீத்துடன் கவுதம் இயக்கும் படம்  ஆகியவற்றிலும் அனுஷ்கா நடித்து வருகிறார்

 

SHARE