ரோம் டென்னிஸ்: அரை இறுதிக்கு நடால், ஜோகோவிக் தகுதி

581

இத்தாலி நாட்டில் சர்வதேச ரோம் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 2 வீரர் ஜோகோவிக் (செர்பியா) 7–5, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிட் பெரரை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு கால்இறுதி நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்) 1–6, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேயை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். அரை இறுதியில் ஜோகோவிக்– ரோனிக் (கனடா), நடால்–டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகின்றனர்.

SHARE