வ/கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி வித்தியாலய அதிபர் திரு.இளங்கோவன் தலைமையில் 13.02.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன். எம்.தியாகராசா, திரு.தர்மபால, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரவிச்சந்திரன், உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் மங்களகுமார், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.