வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

407

வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
வட்டி வீதத்ததை குறைக்கும் படி பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோல் பலர் அதிகரிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் வெங்காயம் அறுவடை செய்யப்படும் வேளையில் பம்பாய் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டமையால் யாழில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான சிறுபோக வெங்காயச் செய்கைக்கான இலக்கு 1500 ஹெக்ரேயர் ஆகும்.
இந்த வருடம் யாழ் மாவட்டத்தில் மரபு வழியான வெங்காய குமிழ் நடுகை மூலமே வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இந்த பயிர் செய்கைக்கான உற்பத்தி செலவு நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்படும் வெங்காய செய்கையின் உற்பத்தி செலவை விட அதிகமாகும்.
தற்போது அறுவடை செய்யப்படும் வெங்காயம் கிலோ 50 ரூபாவுக்கு குறைவாகவே விற்பனை செய்யப்படுகின்றது. எனவே விவசாயிகள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் அவர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் இம் மக்கள் மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளனர்.

 

SHARE