வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை-எம்.கே.சிவாஜிலிங்கம்

390

150பக்கங்கள் கொண்ட என் சாட்சியத்தை வடமாகாணசபைக்கு வழங்குவேன் என வட மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை என்பதை வலியுறுத்தி வடமாகாணசபையில் என்னால் கொண்டுவரப்பட்ட பிரேரணையினை நிறைவேற்றுவதற்கு சாட்சிகளும் வேண்டும் என்றால், 150பக்கங்கள் கொண்ட என் சாட்சியத்தை வடமாகாணசபைக்கு வழங்குவேன் என வட மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கை என்பதனை வலி யுறுத்தி ஜ.நா சபையின் கவனத்தையீர்க்கும் வகையில் கடந்த மே மாதம் சிவாஜிலிங்கம் மாகாணசபையில் ஒரு பிரேரணையினை முன்மொழிந்திருந்தார்.

எனினும் குறித்த பிரேரணை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச நகர் வுகளை பாதிக்கும் எனவும், வெறுமனே ஒரு தீர்;மானத்தை அனுப்பிவைக்க முடியாது எனவும் வடக்கு முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாகாணசபை அ மர்விலும் குறித்த பிரேரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள ம hகாணசபை அமர்விலும் அதே பிரேரணை
முன்மொழிpயப்படவுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எம்.கே.சிவாஜிலிங்கம் முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஆகியோரின் கருத்துக் களுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

மாகாணசபையில் ஒரு பிரேரணையினை 150 சொற்களுக்குள் உள்ளடக்க வேண்டும். என நியதி உள்ளது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு சாட்சிகளையும், விரிவான விளக்கங்களையும் அனுப்பிவைக்க முடியும், மேலும் கட்சியின் தலைவர் கௌரவ சம்பந்தன் மே மாதம் குறித்த பிரேரணையினை நான் முன்மொழிந்த போது என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பிரேரணையினை பிற்போடுங்கள் என கேட்டார்,

பின்னர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா அடுத்த முறை என்னுடன் தொடர்பு கொண்டு பிரேரணையினை பிற்போடுங்கள் என கேட்டார். அதற்கும் பின்னர் முதலi மச்சர் என்னிடம் கேட்டார். இவ்வாறு பிரேரணை இழுபறியில் உள்ளது. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு இன அழிப்பு என ஒத்துக்கொள்கின்றார்கள். எனவே இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் என்ன கஸ்டம். மேலும் இந்த தீர்மானத்தினால் பயனில்லை. சாட்சிகளையும் சேர்த்து அனுப்பிவைக்கவேண்டும். என கூறப்படுகின்றது.

அவ்வாறு சாட்சிகள் தேவை என்றால், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், வடகிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் மனிதவுரிமை அமைப்புக் கள் எமக்கு வழங்கிய அவ்வப்போது நடைபெற்ற சம்பவங்களின் முழுமையான விபரங்கள் எம்மிடம் இருக்கின்றன. எனவே அவற்றை தொகுத்து என்னுடைய சாட்சியாக சுமார் 150 பக்கங்களிலான ஒரு சாட்சியத்தை தயாரித்திருக்கின்றேன்.

அதனை கூட்டமைப்பின் தலைவருக்கும், வடமாகாணசபைக்கும் என்னால் வழங்க முடியும். சாட்சிகள் வழங்கினால் மட்டுமே பிரேரணை நிறைவேற்றப்படும் என்றால் அந்த சாட்சிகளை நான் வைத்திருக்கின்றேன். அதனை வழங்க தயாராகவும் இருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE