வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

410
வடக்கில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்- ஊடகவியலாளர்களுக்குத் தன்னைப்

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே வட மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாணத்திற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மாற்றங்கள் நிகழவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள இந்நிலையில் வடக்கில் ஜனநாயக நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

எனினும் அதற்கு பதிலாக இராணுவ ஆட்சி மேம்படுத்தப்பட்டு வருவதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் தற்போதைய நிலைமை ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பொருளாதாரதை்தை சீர்குழைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

இராணுவ ஆட்சி உள்ள ஒரு மாகாணத்தில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

வடமாகாண இராணுவ ஆட்சி நிலைமைகள் ஏமாற்றத்தை விரக்தியை ஏற்படுத்தினாலும் நம்பிக்கையை இழக்கவில்லை என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஊடங்கங்களுக்குத்  தன்னைப் பிடிப்பதில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் அமர்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. அரை மணி நேரத்திலேயே அமர்வு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் சபை மண்டபத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை சபை மண்டபத்தின் வெளியே நின்று ஊடகவியலாளர்கள் ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆயினும் அனைவரும் வெளியேறிய பின்னர், நீண்ட நேரம் கழித்தே முதலமைச்சர் வெளியே வந்தார். முதலமைச்சரையும் ஊடகவியலாளர்கள் ஒளிப்படம் எடுத்தனர்.

அப்போது என்னைத்தானே உங்களுக்கு நிறையப் பேருக்கு பிடிக்குதில்லை அங்கிருந்த ஊடகவியாலாளர்களிடம் கூறிக்கொண்டே சென்றார் முதலமைச்சர்.

 

SHARE