யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் அதிகளவில் குடும்பத் தலைவர்களை இழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆயிரக் கணக்கான குடும்பத் தலைவர்கள் யுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் 84000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும், குடும்பப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் பொருளாதார சுமையையும் சுமக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இவ்வாறான பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதுடன், வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.