வடக்கு மாகாணச பையில் நிறைவேற்றப் பட்ட தீர்­மானம் என்பது இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் அல்ல. :சுரேஷ் பிறேமச்சந்திரன்

404

 

SAM_6861-copy

வடக்கு மாகாணச பையில் நிறைவேற்றப் பட்ட தீர்­மானம் என்பது இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் அல்ல. இலங்கைத் தமிழ் மக்களைப்பாதுகாப்பதற்கான தீர்மானம். இலங்கைத் தமிழ் மக்­களின் பாது காப்புக்கான தீர்மானத்துக்கு இந்தியாவின் உத­வியை நாடிநிற்கிறோம் என்று கூட்டமைப்பின் பேச்சா ளரும்யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித் துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரி விக் கையில்
இலங்கையில் இடம் பெற்றது இன அழிப்பே என்று வடக்கு மாகாண ச­பையில் நிறை வேற்றப் பட்ட தீர் மானத்தினை வரவேற்கின்றோம் இத்தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பில் இருக்கின்ற ஒருவர் இருவருக்கு ஏற்கமுடியா­தாக இருந்தாலும் அனைவராலும் வரவேற்கக் கூடிய விடயமாகும்.

maithiree-vicky-400-seithy-news

இன்றும் கூட கடந்த அரசாங்கம் யுத்தம் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்தது. மக்கள் சொந்த இடத்தில் இருக்கமுடியாது துரத்தப் பட்­டார்கள். மீன் பிடிப் படகு மூலம் அவுஸ்திரேலியா போனார்கள். முகாம்களில் அவர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். இங்கு இருக்க முடியாத நிலை இளைஞர்க­ளுக்கு உரு வாக்கப்பட்டது.
வெளி நாடு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இனப் படுகொலை வெறு­மனே ஒரு தொகுதி மக்களை கொலை செய்வது மாத்திரமல்ல. ஒரு தொகுதி மக்களை இந்த மண்ணில் வாழவிடாது செய்வது.

தற் போது இராணுவம் இராணுவம் மக்க­ளுடைய காணிகளை வைத்திருக்கிறது என்றால் இந்த மக்களை சொந்த மண்ணில் வைத்திருக்கின்ற நோக்கம் இல்லை. இந்த அரசுக்கும் இல்லை. . அத­னுடைய பொருள் இந்த மக்கள் இதனை விட்டு ஓட வேண்டும். இதுவும் இனப் படுகொலையின் அங்கம். ஆகவே முன்னைய அரசு மாத்திரமல்ல இப்போது இருக்கக் கூடிய அரசும் கூட இனப் படுகொலையின் ஒரு பகுதி பணியை செய்து கொண்டு இருக்கிறது.
மக்களை மீளக் குடியேறாமல் செய்கிறது. மீளக் குடியமர விட்டால் இந்­த மண்ணை விட்டு போற தைத் த விர வேறு வழி யில்லை. மீன் பிடிக்கக் கூடிய மக்களை காட்டுக்குள் விடுவதா விவசாயம் செய்யும் மக்களை நடுத் தெரு­விலே விடுவதா. அவ்வாறு செய்வது நாட்டை விட்டு ஓடிப் போகச் செய்யும் முயற்சியாகும்.

இதுவும் இனப்படு கொலை.
இது மட்டுமின்றி எம்மக்களின் பண்பாடு கலாசாரத்தை அழிப்பது குறிப்பாக வன்னியில் மூலைக்கு மூலை புத்த கோயில். இந்துக்கள் கிறிஸ்த­வர்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் குறிப்பாக பௌத் தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை ஏன். தமிழ் மக்களின் கலாச்சாரம் திட்டமிட்ட முறை­யில் அழிக்கப்படுகிறது.
கிளி நொச்சியில் கிராஞ்சி வலைப் பாடு போன்ற பகுதிகளில் பெண்க­ளுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இது இன்னுமொரு பரம்பரை உருவாகாது த­டுப்பது. இதுவும் இனப் படுகொலையே.
கடந்த அரசும் இந்த அரசும் இதனையே செய்கிறது. ஆகையால் வட மாகாண சபையில் முதலமைச்சர் கொண்டு வந்த மிக முக்கிய தீர்மானம் இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்தை ஐ.நா.வரை கொண்டு சென்று தமிழ் மக்களை பாது காப்பதற்காக ஒரு பொறி முறை உருவாக்குவது கூட்டமைப்பின் கடமையாகும்.
வடக்கு கிழக்கு மாகா ணத்தில் 2 இலட்சம் இராணுவத்தினர் தேவை­யில்லை. குறிப்பாக வடக்கில் 1 ½ இலட்சம் நிலை கொண்டுள்ளது. அவ்வளவு இராணுவம் இங்கு தேவையில்லை.
வடக்கில் இருக்கக் கூடிய 5 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்திற்கு 30 ஆயிர மாக 5 மாவட் டத் திலும் ஒன் றரை இலட்சம் இராணுவம் நிலை கொண்­டுள் ளது. 10 இலட்சம் மக்கள் இருக்கக் கூடிய மாவட்டத்தில் இவ்வளவு இரா­ணுவம் தேவை யில்லை என்று புதிய அரசுக்கு நாம் கூறிக் கொள் கின்றோம்.
இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் இருக்கின்றன. வடக்கில் இருக்கும் இராணுத்தை சரி சமமாக பிரித்து கொள்ள முடியும். அவ்வாறு பிரித்­துக் கொள்வதன் ஊடாக வடக்கு மாகாணத்தினுடைய மக்க ளினுடைய பல நிலங்கள் விடுவிக்கப்படும். அந்த நிலங்களில் மக்கள் மீளக் குடியமர்வதற்கு பிர யோ சனப்படுத்தக் கூடியதாக இருக்க முடியும்.
10 இலட்சம் மக்கள் இருக்கக் கூடிய இடத்தில் ஒன்றரை இலட்சம் இரா­ணு வமும் 2 கோடி மக்கள் இருக்கக் கூடிய தென்பகுதியில் 30 ஆயிரம் இராணு­வத்தை வைத்திருப்பது மிகவும மோசமான தமிழ் மக்களை இராணுவ ஆட்­சிக்குள் வைத்திருக்கும் விடயம். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்­மையாக கண்டிக்கிறது.
நாங்கள் ஜனாதிபதி மைத்திரி ரணில் சந்திரிகா ஆகியோரிடம் ஏற் கனவே கூறியுள்ளோம். மக்கள் மீளக் குடியமர்த்துங்கள் இவை ஒரு புறம் போனாலும் கூட.
இங்கு வந்த பாதுகாப்பு அமைச்சர் கூறிய விடயம் மக்களால் ஏற்றுக்­கொள்ளப் படாத விடயம். தமிழ் தேசிய கூட்டமைப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத விடயம் தெளிவாக கூறினோம்.
மீள் குடியேற்றம் என்பது துரிதமாக செய்யப் பட வேண்டும். 100 நாட் க­ளுக்குள் இதனை செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் மக்கள் மீளக்குடியமர்த்த வேண்டும். இதில் வலி வடக்கில் 58 சதுர கிலோ மீற்றர் பரப்பரளவில் பலாலி விமான நிலையம் மற்றையது துறை முகம் இந்த இரண்டு இடங்களையும் தவிர ஏனைய இடங்கள் மீள் குடியேற்ற முடியும். இதில் பாலாலி விமான நிலையம் துறை முகம் இரண்டும் 5.3 கிலோ மீற்றர் கொண் டது. ஏனைய இடங்கள் விடு விக் கப் ப டலாம் இந்த இடங்களில் இராணுவ முகாம்கள் கமத் தொழில் எவையும் இல்லை. இந்த இடத்தில் மக் களை உடனடியாக மிள் குடி­யேற்ற முடியும்.
மிகுதியாக உள்ள குறிப்பாக வலி.வடக்கு பலாலி விமான நிலையத்தை அண்மித்து 18 சொகுசு விருந் தினர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொரு இராணுவப்பிரிகளுக்கும் உடைய தாக கட் டப்பட்டுள்ளன. குறிப்­பாக மைதானம் ஆடு மாடு வளர்க்க கூடிய இடம். சீமைக்கிழுவை மரங்கள் வளர்க் கப்பட்டு அதில் இருந்து மின்சாரம் பெறும் திட்டம். விவசாய நிலங்கள் இருக்கின்றன. இவை 15 முதல் 16 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் மக்களின் நிலமாக உள்ளன. இது இராணுவ பாதுகாப்புக்கு அல்ல. மாறாக இராணுவ சுகபோக வாழ்க்கைக்கே இவை அமைக்கப்பட்டள்ளன.
தமிழ் மக் களின் காணிகள் சுவீகரிக்கப் பட்டு விவசாயம் விடுதிகள் நீச்சல் தாடாகம் விளைாயட்டு திடல்கள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் இவை தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமரிக்கும் சந்திரிகா வுக்கும் மீள்குடியேற்ற அமைச்சருக்கும் கூறி இப் பகுதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மக்கள் குடியமர்த்தப் பட வேண்டும் என கேட்டுள்ளோம். நாங்கள் இவ்வாறு கேட்கும் இடத்தில் யாழ்.வந்த பாதுகாப்பு இரா ஜாங்க அமைச்சர் முறனானதும் பிழையானதுமான ஏற்றுக் கொள்ள முடி யாத கருத்துக்களையே கூறி யுள்ளார்.
இத்தகைய நிலையே சம்பூரிலும் உள்ளது. அப்பகுதி மக்களையும் சொந்த இடத்தில் குடி யேற்ற வேண்டும்.
இந்தியா இலங்கைத் தமிழ் மக்களின் நட்பு நாடு என்பதை இன்னும் நாம் நம்புகிறோம் அது மாத்திர மன்றி 120 கோடி மக்கள் வாழ் கின் றனர் இதனால் இந்தியா பிராந்திய வல்லரசு நாடாக திகழ்கின்றது.
அது மட்டுமன்றி அண்டை நாடு என்பதுடன் இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியம் என்று கருதுகிறோம். இந்தியாக்கும் பாகிஸ்தானுக்கும் நடை­பெற்ற யுத்த காலத்தின் போதும் சீனாவுடன் இந் தியாவுக்கு நடை பெற்ற யுத்­தத்தின் போதும் இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவுக்கே ஆதரவளித் தார்கள். இது வரலாறு. இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு இந்தியாவின் பாது­காப்பில் பிரிக்க முடி யாது என் பதில் நாம் மிகத்தெளிவாக இருக்கின்றோம். எனினும் ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா என்ன நிலைப்­பாட்டில் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இப் போது கொண்டுவப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையில் நிறை­வேற்றப் பட்ட தீர்மானம் என்பது இந் தியாவுக்கு எதிரான தீர்மானம் அல்ல. இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம்.

இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கான தீர்மானத்துக்கு இந்தியாவின் உதவியை நாடிநிற்­கிறோம். அது மட்டுமன்றி இன்று அரசாங்கம் மாறியிருக்கலாம். புதிய அரசு வந்திருக்கலாம். இவர்கள் இன் னொரு தேர்தலுக்கும் போய் வேறு அரசாங்கமும் வரலாம். வருபவர்கள் இலங்கையின் இனப் பிரச்சி னையை இலங்கை வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய வகையில் தீர்ப்பார் ளா என்ற கேள்வி நிச்ச யமாக இருக்கின்றது. பாதிக்கப் பட்ட மக்கள் நாங்கள் பல லட்சம் மக்கள் கொல்லப் பட்­டார்கள் பொரு ளாதாரத்தை இழந்துள்ளோம். நாங்கள் எமது உரிமைகளுக்காக போராடியவர்கள். இந்த மண்ணில் சிங் கள மக்களுக்கு சமமாக அதற்கு மேலாக இந்த வாழக் கூடிய மக்களாகவே எமது அரசியல் அதி கா ரங்களுடன் வாழ்வதற்­கான முழு உரிமையும் இருக்கிறது என்ற அடிப்படையில் எமது பிரச்சினை நோக் கப் பட வேண்டும்.
தங்களுடைய நாட்டு நலன் களை முன்னிறுத்தி புதிய அரசு வந்து­விட்டது. இது சீனாவுடனான உறவை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படத்தி­யுள்ளது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று இந்தியா பார்ப்பது சரியாக இருந் தாலும் கூட தமிழ் மக்களுடைய உரிமைகள் பகிரப்பட­வில்லை. தமிழ் மக்களுடையஇனப் பிரச்சினைக்கு சரியான தீர்வு முன் வைக்கப்­படவில்லை.

ஏற்கனவே கொடுக் கப் பட்ட அதி காரம் செயற்படுத்த முடியாதது. அது அற்பத்தனமானது. எமது அரசியல் சாசனத்தில் மாற்றம் தேவை. எல்லா­வற்றையும் இந்தியா புரிந்து கொண்டு தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைத் தீர்வுக்காக அவர்கள் தமது குரலை வெளிப்படுத்த வேண்டும்.
ஐ.நா சபையில் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஐ.நா சபையில் வரக் கூடிய அறிக்கை வெளி வருவதற்கு அனை வரும் ஒத்துழைக்க­வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இந்தியாவாக இருக்கலாம் அமெரிக்காவாக இருக்கலாம். விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அவ்அறிக்கையில் குறிப்பிடப் படும் விடயம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இந்தியா அமெரிக்கா இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இலங்கைக்கு சீனாவிலிருந்து இரண்டு நீர்முழ்க்கிக் கப்பல்கள் வந்தபோது இந்தியா மிகவும் வன்மையாகக் கண்டித்தது.

நாங்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் என்று ஏற்றுக்கொண்டோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்த நூறு நாள் திட்டத்தில் எதுவுமே இல்லை. தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டும்இ அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் போன்ற விடயங்களை நாங்கள் கேட்கின்ற போது அதற்கும் அதற்கான ஒத்துழைப்பை அதற்கான குரலை இந்தியா அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளிலிருந்தும் எதிர்பார்க்கிறோம்.
நாம் சர்வதேச நிலைமைகளை மற்றும் பிராந்திய நிலமைகளை நாம் புரிந்துகொண்டுள்ளோம். இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது வெறுமனே பந்தடிக்கின்ற பிரச்சினை என்றில்லாது மக்கள் கௌவரத்துடன் எவ்வித பிரச்சினையும் இல்லாது வாழும் சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பது எமது அடிப்படைக் கோரிக்கையாகும் என்றும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

SHARE