வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன

527

குருநாகல், பொத்துஹெர பகுதியில் புதன்கிழமை (30) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து பளைக்கான  ரயில் சேவை  அட்டவணையின்படி இன்று இயங்குவதாகவும் சிறு திருத்தங்கள் இன்று காலையுடன் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பிற்பகல் இரண்டு மணியுடன் ரயில் பாதை முற்று முழுதாக தயாராகுமெனவும்  ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

SHARE