வட கொரியாவில் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிகளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர்.
தற்போது, கிம் ஜாங் உன்னுக்கு பதிலாக வடகொரியா மக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். அதுதான் முடி உதிர்தல் ஆகும்.
வட கொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்வதாகவும், அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் உள்ளது.
நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி,
முடி உதிர்தல் தொற்றுநோய் வட கொரியாவில் வேகமாக பரவுகிறது என்று தென் கொரிய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கு காரணம் வட கொரியாவில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் என்று நிபுணர்கள் குற்றம் சாட்டினர்.
பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக உள்ளது.
தற்போது வட கொரியாவில் மட்டுமின்றி தென் கொரியாவிலும் திடீரென முடி உதிர்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.