வதந்தி கிளப்பினால் சட்டப்படி நடவடிக்கை நயன்தாரா எச்சரிக்கை 

423
இளம் நடிகருடன் இணைத்து கிசுகிசு வெளிவருவதைஅறிந்து கோபம் அடைந்தார் நயன்தாரா. நயன்தாரா தீவிர நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்கத்தில் தனியொருவன் என்ற படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதேபடத்தில் கணேஷ் வெங்கட்ராமனும் நடிக்கிறார். அவருடன் நட்பாக பழகும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் நயன். ஆனால் நயனும், கணேஷ் வெங்கட்ராமனும் ஷூட்டிங்கில் நீண்ட நேரம் மனம்விட்டு பேசி பழகுவதாகவும், இருவரும் காதல் வயப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் பட யூனிட்டில் சிலர் கிளப்பிவிடுகிறார்களாம். இது மெதுவாக நயன்தாரா காதில் விழ கொதித்துவிட்டாராம்.

 

ஏற்கனவே பல்வேறு கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்ட நயன்தாரா மற்றொரு சக நடிகருடன் இணைத்து கிசு கிசு கிளம்பியதை அறிந்து அப்செட் ஆனார். என்னைப் பற்றி இனியும் வதந்தி கிளப்பி விட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறி உள்ளாராம். இதுபற்றி கணேஷ் வெங்கட்ராமன் கூறும்போது,இதுபோல் வதந்தி எப்படி வருகிறது என்று தெரியவில்லை. நயன்தாராவும், நானும் சக கலைஞர்கள். என்னைப்பற்றி இப்படியொரு தகவலை நான் கேட்பது இதுதான் முதல்முறை என்றார்.

 

SHARE