வன்முறைகளைத் தூண்டிய அமைப்போ அல்லது தூண்டிய நபரோ இதுவரையில் தண்டிக்கப்படவில்லை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது -ஹக்கீம்:

456

 முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக இலங்கையின் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை உறுதி செய்யப்பட வேண்டுமென அவ வலியுறுத்தியுள்ளார்.

வன்முறைகளைத் தூண்டிய அமைப்போ அல்லது தூண்டிய நபரோ இதுவரையில் தண்டிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

231a518bc6937cd83e7a6280d35b35dc_XL GRBBS041813

எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியமை வரN;வற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய சம்பவங்களின் பின்னர், பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படைவாத அமைப்பு ஒன்றே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் எனவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் முஸ்லிம்கள் நாட்டில் அமைதியான முறையில் வாழ முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த அடிப்படைவாத அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வருவாகத் தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

na

பௌத்தரோ அல்லது வேறும் மதப் பிரிவினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE