வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா?

565

Is it true that smaller age diminish interest in sex?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை  நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச்  சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை.  இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும்விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள்.  இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்;த வயதில்தான் தாம்பத்ய சுகத்தை  பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.

பெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய்முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப்  போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும்,  மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால்  இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ  பயன்படுத்தலாம்.

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும்.  இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என  பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக்  குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

SHARE