வர்த்தமானி அறிவித்தல் கைதுக்கான உத்தரவல்ல! இராணுவப் பேச்சாளர்

567

16 புலம்பெயர் தமிழ் அமைப்­புக்களுடன் 424 புலம்­பெயர் தமி­ழர்களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டு பட்­டி­ய­லி­டப்­பட்­ட­மை­யா­னது, அவர்­களை கைது செய்­வ­தற்­கான அறி­வித்­தலோ அல்­லது தடை உத்­த­ரவோ கிடை­யாது என இராணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணிகசூரிய தெரி­வித்தார்.

பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

16 புலம்பெயர் அமைப்­புக்கள் மற்றும் 424 தமி­ழர்கள் தொடர்­பான வர்த்­த­மானி பிர­சுரம் தொடர்பில் பலரும் பல வித­மான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­வ­தா­கவும், அது தொடர்பில் தெளி­வின்­மையே அதற்கு காரணம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபையில் 2011 ம் ஆண்டு செப்­டம்பர் தாக்­கு­தலை தொடர்ந்து 1373, 1267 ம் இலக்கம் கொண்ட இரு பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன.

அதில் ஒன்று தலிபான் மற்றும் அல்கைதா அமைப்­புக்­க­ளை தடை செய்­வ­தா­கவும் அத­னுடன் தொடர்­பு­டைய நபர்கள் மற்றும் அமைப்­புக்­களை இனம் கண்டு அவற்­றுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தா­கவும் அமைந்துள்ளன.

இரண்­டா­வது தேசிய மட்­டங்­களில் செயற்­படும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் பட்­டி­ய­லிட்டு செயற்­ப­டு­ப­டு­வ­தாகும்.இது 1373 ஆம் இலக்கம் கொண்ட பிரே­ரணை.

இந்த இரு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் தொடர்­பிலும் ஐக்­கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்­வொரு நாட்­டிலும் பிரதிநிதிகள் நிய­மிக்­கப்­பட்டு அவை அமுல் செய்­யப்­பட்டு வரு­கின்றது.

1267 ம் இலக்க பிரே­ரணை தொடர்பில் இலங்கை பிரதி நிதி­யாக மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­ விதாரன செயற்­ப­டு­கின்றார்.

1373 ஆம் இலக்கம் கொண்ட பிரே­ரணை தொடர்பில் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ச செயற்­ப­டு­கின்றார்.

இந் நிலை­யி­லேயே ஐக்­கிய நாடுகள் சபையின் குறித்த பிரே­ர­ணைக்­க­மைய பாது­காப்பு செய­லா­ள­ரினால் 16 அமைப்­புக்­களும் 424 நப­ர்­களும் பட்­டியல் படுத்­தப்­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய நாடுகள் சபையின் குறித்த பிரதிநிதிகளை அணு­கு­வதன் ஊடாக தாம் நிர­ப­ரா­திகள் எனில் அதற்­கான ஆதா­ரங்­களை முன்­வைத்து பட்­டி­யலில் இருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும்.

அவர்கள் நிர­ப­ரா­திகள் எனில் அதற்­கான ஆதாரங்களை அந் நாட்டில் உள்ள பிரதிநிதிகள் பரீட்சித்து எமக்கு அது தொடர்பில் அறிவிப்பர். அப்போது அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

எனினும் இதுவரை இலங்கை தடை செய்த 16 புலம்பெயர் அமைப்புக்களும் 424 நபர்களிலும் எவரும் இதுவரை தம்மை விடுவித்துக்கொள்ள முன்வரவில்லை என குறிப்பிட்டார்.

SHARE