வாக்னர் கூலிப்படைக்கு புதிய தலைவரா? வெளியான தகவல்!

28

 

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் இராணுவத்தின் தலைமை குறித்து தற்போது சமீபத்திய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த செய்திகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் வாக்னரின் இராணுவத்தின் முன்னாள் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் மகன் புதிய தலைவராக வருவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

பிரிகோஷின் மகன்
இதன்படி, வாக்னர் இராணுவத்தின் கட்டுப்பாடு மற்றும் பிரிகோஷின் அனைத்து சொத்துக்களும் அவரது மகனுக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

24 வயதாகும் பாவெல் பிரிகோஷின் என்பவருக்கு பிரிகோஷின் அனைத்து சொத்துக்களும் சேரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் மாஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் வாக்னரின் இராணுவத்தின் முன்னாள் தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் கொல்லப்பட்டார். அதன் பிறகு, வாக்னரின் படைக்கு எந்தத் தலைவரும் பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

SHARE