வாரணாசி வந்தார் மோடி: கங்கையில் ஆரத்தி எடுக்கிறார்

577

பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திரமோடி இன்று மாலையில் புனித நகரான வாரணாசி வந்தார். தனி ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மோடிக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர்.

இந்த தொகுதியில் மோடி சுமார் இரண்டே முக்கால் லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் போட்டியிட்ட மோடி வதோதராவில் நேற்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இன்று அவர் வாரணாசி வந்தார்.

இன்று இரவு 7 மணியளவில் மோடி கங்கையில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கென சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீதி முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் மலர் அலங்காரம் செய்துள்ளனர். மோடி வருகையை முன்னிட்டு வாரணாசியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காசி கோயிலில் மோடி சிறப்பு பூஜை: முதலில் காசி விஸ்வநாதர் கோயிலில் மோடி சிறப்பு பூஜை செய்தார். இவருடன் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கும் சென்றார்.

SHARE