விக்னேஸ்வரன் யாழ். இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

578
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர்  தெரிவித்தனர்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே முதலமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர், ‘கோல்டர்’ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE