யாமிருக்க பயமே படத்திற்கு பிறகு வெளிவரவிருக்கும் கிருஷ்ணாவின் படம் வானவராயன் வல்வராயன். அப்பா பட்டியல் சேகர் தயாரித்திருக்கிறார். அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் வன்மம் படத்திலும், அண்ணன் விஷ்ணுவர்த்தன் இயக்கும் யட்சன் படத்தில் ஆர்யாவுடனும் நடித்து வருகிறார். வன்மம் படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார்.
இதேபோல புதுமுக இயக்குனர் ஆனந்த் குமரேசன் இயக்கும் வசந்தகுமாரன் படத்தில் விஜய்சேதுபதியின் ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு புதிய ஜோடிகளில் யாருக்கெல்லாம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகப்போகிறதோ தெரியவில்லை.