விடாமுயற்சி ஏன் தாமதம் ஆகிறது.. காரணம் அஜித் தானா

30

 

துணிவு வெற்றிக்கு பின் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் தான் எடுக்கப்பட்டு வருகிறது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தாலும், ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு காரணம் அஜித் தானா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதற்கு அஜித் காரணம் இல்லையாம்.

காரணம் இதுதான்
தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து நிதி நெருக்கடி இருப்பது தான், படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு தயாரிப்பு செலவு மட்டுமே ரூ. 50 லட்சம் ஆகிறதாம்.

ஆகையால் நிதி நெருக்கடி தான் படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு காரணம் என்கின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவதால், அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் துவங்கவுள்ள படத்தின் படப்பிடிப்பும் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறதாம்.

மார்ச் மாதமே முடியவிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது மே மாதம் வரை நடக்கும் என கூறப்படுகிறது. இதனால் மே மாதத்திற்கு பின் தான் ஏகே 63 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரியவந்துள்ளது.

SHARE