விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகு பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது.

417
விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகு பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது.
news_30051

இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று விசாரணை நடத்தும் குழுவின் பெயரை தற்போது வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது.

மேற்படி பாகிஸ்தான் செல்வந்தர்களில் ஒருவர் சில காலம் பாகிஸ்தான் அமைச்சராக இருந்த சலீம் மெண்டிவிவாலா ஆவார். இவர் பாகிஸ்தான் முதலீட்டுச் சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மற்றைய பாகிஸ்தான் செல்வந்தர் அமெரிக்க பிரஜையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய ஆதரவாளருமான இமாத் சுபைர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் செல்வந்தர் மூலம் அமெரிக்காவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சலீம் மெண்டிவிவாலா பாகிஸ்தான் அரச பதவிகளில் இருந்து ஒய்வுபெற்று சர்வதேச ரீதியில் பல தொழிற்துறைகளை நடத்தி வருகிறார்.

இவரை அலரி மாளிகையில் அடிக்கடி காண முடியும் என கூறப்படுகிறது, இதனிடையே ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் இலங்கையில் உள்ள நான்கு முக்கிய செல்வந்த வர்த்தகர்கள் மூலமாக  நிதிய ஒப்பந்தம் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை நடத்தி வரும் குழு கண்டுப்பிடித்துள்ளது.

அதேவேளை ஆயுத கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம், கப்பம், பொது நிதி உட்பட பலவற்றில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொள்ளையிட்ட பணம் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டு அதனை எந்த விதத்தில் மறைக்க முயற்சித்தாலும் உலகத்தில் தனியான குழுவொன்று அது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அந்த பணம் எந்த பெயரிலோ, யாருடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும் அதனை பொது உடமையாக்குவதற்கான சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இதற்கு சிறந்த உதாரணம் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், அவர் கொள்ளையிட்டு சேர்த்த சகல பணம் மற்றும் சொத்துக்கள் பொது உடமையாக்கப்பட்டுள்ளன.

முபாரக் குடும்பத்தினர் கறுப்பு பணத்தை வைப்புச் செய்திருந்த கணக்குகள், சொத்துக்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் பெயர்களில் இருந்து சொத்துக்கள் என அனைத்து உடமைகளும் ஒரு சில மணி நேரங்களில் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE