விடுதலைப்புலிகளும் இந்திய மீனவர்களுடன் வருவார்கள் என்ற சந்தேகத்திலேயே இந்திய மீனவர்கள் கைது செய்யபபடுகின்றனர்

372

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துகொண்டிருந்ததாக கூறி மேலுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.அவ்வாறு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ள 32 பேரையும்; அவர்களிடமிருந்து எட்டு படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்திய மீனவர்கள் 42 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை மாலை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். தலைமன்னார் கடற்பரப்பினுள் 8 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 42 இந்திய மீனவர்களே கைதாகியிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களினுள் மட்டும் அவ்வாறு 74 இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

SHARE