விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை

944

 

விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை அவர்களை முற்றாக அழித்து தமிழினத்தை அடக்கியாள வேண்டும் என்கிற ஏகோபித்த கருத்தையே ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் கொண்டிருந்தார்கள்.

 

வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை

இலங்கையில் ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழினம் சிறுபான்மை இனத்தவர்களாக இருந்துகொண்டு தமது வாழ்வுரிமைகளை வடக்கு கிழக்கில் விஸ்தரித்து செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு அஹிம்சை வழியில் தந்தை செல்வா வழிநின்று போராட்டங்கள் பரவலாக இடம்பெற்றது. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணமே இருந்தன. பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித் தெறியப்பட்டது. தமிழ் ஆராய்ச்சி மாநாடு இடம்பெற்றபோது நேர டியாக சிங்களக் காடையர்கள் அந்த மாநாட்டைக் குழப்பினர். அதன் பின்னர் நீண்டதொரு குழப்பமாக பண்டாரநாயக்கவால் சிங்கள தனிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை தந்தை செல்வா எதிர்க்க மீண்டும் கொழும்பில் கலவரங்கள் வெடித்தது. தமிழ் இளைஞர்கள் வெளியில் தலைகாட்டவே பயந்து வாழ்ந்தனர். கைது நடவடிக் கைகள் அத்துமீறி இடம்பெற்றன. இதனோடு தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் சிறையில் அடைக்கப் பட்டார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரானார். ஆனால் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தனவே தவிர, நிறுத்தப்படவில்லை.

1972 தொடக்கம் 2015 வரை ஆட்சிசெய்த 07 ஆட்சியாளர்களுள் தமிழினத்தின் கனவை நனவாக்க வேண்டும் என்று ரணசிங்க பிரேமதாசா அவர்கள் முயற்சிகள் எடுத்தும் அவர் தனது நயவஞ்சகத்தனத்தினால் தமிழினத்தை ஏமாற்ற நினைத்தபோது விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்கு தலுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார். இப்படியே அடுத்துவந்த ஜனாதிபதிகள் ஒவ்வொன்றும் போர், சமாதா னம் என்ற ஒரு நிலைப்பாட்டையே தந்திரோபாயமாக கொண்டு செயற்பட்டனர். விடுதலைப் புலிகளின் வளர்ச்சி கண்டு வியப்படைந்த தென்னிலங்கை அவர்களை முற்றாக அழித்து தமிழினத்தை அடக்கியாள வேண்டும் என்கிற ஏகோபித்த கருத்தையே ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் கொண்டிருந்தார்கள்.

தன் பிரகாரம் இலங்கையை ஆட்சி செய்த ஆடசியாளர்களது வரலாற்றைப் பார்க்கின்றபோது, இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியர சின் அரசுத்தலைவர் (Pசநளனைநவெ ழக னுநஅழஉசயவiஉ ளுழஉயைடளைவ சுநிரடிடiஉ ழக ளுசi டுயமெய) அல்லது இலங்கை ஜனாதிபதி இலங்கை அரசின் தலை வரும் முக்கிய அரசியல் தலை வருமாவார். இப்பதவி 1978இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத் தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படு வதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதைய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறி சேன ஆவார். எனினும் தற்போது முழுமையாக நிறைவேற்றதிகாரம் நீக்கப்படாமல் ஒருசில அதி காரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது ஜனாதிபதியொருவர் காணப்படவில்லை. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை ஜனாதிபதி பதவிக்கு மாற்றியது. எனி னும் ஜனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைப்புச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இலங்கையின் ஜனாதிபதி முறைமை பிரான்சின் ஜனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடிய தாக காணப்படுகிறது. இலங்கை யின் ஜனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கு வதன் மூலம் கடந்து செல்ல முடியும்.

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தின் மூன்றில் – இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகால சட்டத்தை பிறப்பிக்க முடியும். இதன் போது ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்படவேண்டிய அவசிய மில்லை. 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதாக வாக்குறுதியளித்தார், எனினும் இது நடைமுறைப்படுத்தவில்லை. 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது ஜனாதி பதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கையை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள்

01.வில்லியம் கோபல்லாவ (மே 22, 1972 – பெப்ரவரி 4, 1978)
02.ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்தன (பெப்ரவரி 4, 1978 – ஜனவரி 2, 1989)
03.ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 – மே 1, 1993)
04.டிங்கிரி பண்டா விஜயதுங்க (மே 2, 1993 – நவம்பர் 12, 1994)
05.சந்திரிக்கா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005)
06.மஹிந்த ராஜபக்ஷ (நவம்பர் 19, 2005 – ஜனவரி 9, 2015)
07.மைத்திரிபால சிறிசேன (ஜனவரி 9, 2015 – இன்று வரை)

வில்லியம் கோபல்லாவ இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாவார். இவர் 1958 – 1961 காலப் பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961 – 1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூது வராகவும் செயலாற்றினார். 1962 – 1972 வரையில் இலங்கையின் மகா தேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு ஜனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்ற திகாரம் கொண்ட ஜனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார். இவரது மகன், மொண்டி கோபல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுபட்டவராவார்.

ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்தன இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர் என பிரபலமாக அறியப்பட்டார். இவர் ஜனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவி களை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

ரணசிங்க பிரேமதாசா இலங்கையின் முன்னாள் அதிபரா வர். இவர் அதிபராவதற்கு முன்னர் ஜே.ஆர் தலைமையிலான அரசில் பெப்ரவரி 6, 1978 தொடக்கம் மார்ச் 3, 1989 வரையில் பிரதமரா கவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் பலர் இரகசியமான முறையில் கடத்தப்பட்டு பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் மணிக்கூட்டு கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு இவர் ஆருடத்தில் (சோதி டம்) நம்பிக்கையுள்ள சோதிடர் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இவர் 1993இல் மே தின ஊர்வலத்தின் போது, கொழும்பு ஆமர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.

டிங்கிரி பண்டா விஜயதுங்க இலங்கையின் 4வது ஜனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமாவார். ஜனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாசா அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்டவர்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனாதிபதி யுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார். இவரது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். தந்தை கொலை செய்யப்பட்ட பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறி மாவோ பண்டாரநாயக்கா 1960இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதி யில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார். தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் பிரதமரும் ஆவார். முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6ஆவது இலங்கை அரசுத் தலைவராகப் பதவியில் இருந்தார். வழக்கறிஞரான இவர் 1970இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார்.

தொடரும்…

மறவன்

SHARE