விபச்சாரிகளை வைத்து தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட அருண்

376
arun 2_CI

பாகிஸ்தானுக்கான உளவாளியாக செயற்பட்ட அருண் செல்வராஜா, இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பமில்லாதவராக இருந்தார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவரை விசாரணை செய்துவரும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய விசாரணையின்போது இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்தனர்.

சென்னையில் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை நடத்திவந்த அருண், தமது விசாரணையின்போது இந்த தகவலை வெளியிட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தாம் ஏன் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லாதவராக இருந்தார் என்பதை அருண் கூறவில்லை.

இதில் இருந்து அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதன் காரணமாகவே இலங்கை செல்ல விரும்பாமல் இருந்திருக்கலாம் என்று விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.

எனவே தமது சந்தேகம் உண்மையாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் தாம் அருணிடம் இருந்து முழுமை தகவல்களையும் பெறமுடியும் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தென்னிந்தியாவில் யாரின் உதவியுடன் அவர் கல்பாக்கம் அனல்மின்சார மையம், துறைமுகங்கள் உட்பட பல முக்கிய நிலைகளுக்கும் சென்று தகவல்களை திரட்டினார் என்பதை அறிய வேண்டியுள்ளதாகவும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபச்சாரி_சிலோன் சீ நிவ்ஸ் images (1)

விபச்சார தொழிலில் ஈடுபடுவோருடன் அருண், தொடர்புகளை கொண்டிருந்தமை அவரின் கைத்தொலைபேசி தகவல்களில் இருந்து அறியவந்துள்ளது.

எனினும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

பாகிஸ்தானுக்காக, உளவுபார்த்ததாக கூறி தென்னிந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்றாமவர் அருண் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமீம் அன்சாரி என்ற தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வருடம் ஏப்ரலில் சகீர் ஹுசைன் என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அன்சாரியின் தொலைபேசி தொடர்பில் அருணின் இலக்கம் இருந்தமைமையை அடுத்தே அருண் தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் உத்தரபிரதேஸின் மொரதாபாத் வங்கி ஒன்றில் மேற்கொண்டிருந்த பணக்கொடுக்கல் வாங்கல்களை இந்திய மத்திய நிதித்துறை புலனாய்வாளர்கள் நெடுநாளாக கண்காணித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE