பயணிகளுடன் மலேசிய விமானம் விபத்து – காதலியுடன் விமானி தப்பியதாக தகவல் 300 பேர் வரை உடல் கருகி பலி

419

மலேசிய விமானமொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 295 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் எல்லைப்பகுதியில் உக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.

images

கோலாலம்பூரிலிருந்து அம்ஸ்டாம் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்.17 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக மலேசிய விமான சேவை அறிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு உக்ரேய்ன் பகுதியில் விமானம் வெடித்து சிதறியுள்ளதாக மொஸ்கோவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக தீவிரவாதிகள் யுத்தம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் பல உக்ரேய்ன் விமானங்களை தீவிரவாதிகள் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகளுக்கு ரஸ்யா ஆயுதங்களை வழங்கி வருவதாக உக்ரேய்ன் குற்றம் சுமத்தி வருகின்றது  விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரேய்ன் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

போயிங் 777 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாகவும் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் உயிரிழந்துள்ளதாக உக்ரேய்ன் உள்துறை அமைச்சினை மேற்;கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டில் ஏற்கனவே மலேசிய விமானமொன்று காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து நொருங்கியதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

தனது விமானம் (எண் எம்எச்17) உடனான தனது தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடைசியாக அந்த விமானத்துடனான தொடர்பு என்பது யுக்ரெய்ன் வான்பரப்பில் பறந்தபோது கொண்டிருந்தபோது தான் என்றும் அந்த விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.

Malaseja-Felit-01-600x397

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கிழக்கு யுக்ரெய்னில் இந்த விமானம் தரையில் எரிந்ததை கண்டதாக மாஸ்கோவில் இருக்கும் வான்வழி கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட விமானம் ரஷ்ய வான்பறப்பிற்குள் நுழையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் ஏவுகணை மூலம் தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெரஷெங்கோ தெரிவித்ததாக அசோசியேட்டர் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் காரணமா?

கிழக்கு யுக்ரெய்னில் யுக்ரெய்ன் ராணுவ விமானங்கள் பல ஏவுகணைதாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் யுக்ரெய்னிய அரசை எதிர்த்து சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தமக்கு தெரியவந்திருப்பதாக கூறும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது. முன்னதாக யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த எஸ்.யு 25 ரக விமானம் புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார். ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின.

இந்த காட்சிகளை பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதிகளுக்கு தான் உதவி ஏதும் தருவதாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத்திருக்கிறது. 10,000 அடி உயரத்தில் விமானத்தை எதனால் சுட்டு வீழ்த்த முடியும்?

இதேவேளை 10,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தவேண்டுமானால் அது தொலைதூரம் பறக்கவல்ல நிலத்தில் இருந்து வான்வெளிக்கு ஏவக்கூடிய நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையால் மட்டுமே அது சாத்தியம் என்றும், அதுவும் கூட ராடார் உதவியுடன் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெவித்தார்.

அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த விமானமானது மனிதர்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மேன்பேட் என்கிற ஏவுகணைத்தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அத்தகைய குறுகிய தூர ஏவுகணையின் வீச்சு அவ்வளவு தூரம் செல்லாது என்று மதிப்பிடப்படுகிறது.

இவை தவிர வானிலிருந்தபடியே ஏவப்பட்டு தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற ராணுவ தாக்குதல் விமானத்தினால் மட்டுமே இந்த விமானம் தாக்கப்பட்டிருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதில் எது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அமெரிக்காவின் வசம் இருக்கும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது. நிலத்தில் இருந்து வான் நோக்கிச் சென்று தொலைதூர தாக்குதல் நடத்தப்படும்போது அத்தகைய ஏவுகணைகள் வெளி உமிழும் புற ஊதாநிற புகையை இந்த செயற்கைக்கோள்களின் படங்கள் காட்டிக்கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE