விமலின் திருமண ரகசியத்தை போட்டுடைத்த பிரபல இயக்குனர்

455

மலேசியாவின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மைந்தன்’.

இதில் சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘மைந்தன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப் திரையரங்கில் நடைபெற்றது. மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இசை தகட்டை வெளியிட இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பாடல்களை வெளியிட்டுப் பேசும் போது நடிகர் விமலின் கல்யாணம் பற்றிய ஒரு சுவையான செய்தியை வெளியிட்டார். அதில் விமலுக்கு கல்யாணம் செய்து வைத்தது நான்தான். அவர் பிரியதர்ஷினி என்கிற பெண்ணைக் காதலித்தார் இரண்டு பேர் வீட்டுக்கும் இது தெரியாது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டார் ரகசியமாக. நான் சவீதா கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்குப் போன போது அங்கு மாணவிகள் கிசுகிசுத்தார்கள். இது பற்றிப் பேசிய போது வெளியே தெரியக் கூடாது என்றார்கள்.

அப்படியா விஷயம் என்று இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டு வாருங்கள் என்றேன். கொண்டு வந்தார்கள்.அதே மேடையில் எல்லார் மத்தியிலும் விமலுக்கு திருமணம் நடத்தி வைத்தேன். எல்லாருக்கும் தெரிய வைத்தேன். அப்படி திருட்டுக் கல்யாணம் செய்த விமலுக்கு நான்தான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைத்தேன். இப்படி திருட்டு கல்யாண ஜோடி யாராவது இருந்தால் சொல்லுங்கள் நான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைக்கத்தயார் என்று சொல்லி முடிக்க அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

SHARE