விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை!

403
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் 12 அம்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக் கொள்வதும் அது குறித்து பேச்சுவார்த்தை நடாத்த இணங்குவதும் இரு வேறுபட்ட விடயங்களாகும்.

உத்தியோகபூர்வமாக 12 அம்ச கோரிக்கைகளை அமைச்சர் விமல் வீரவன்ச சமர்ப்பிக்கவில்லை.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

பேச்சுவார்த்தை நடாத்தவே அரசாங்கம் இணங்கியுள்ளது என கெஹலிய தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE