விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப்-பவுச்சர்டு அரையிறுதிக்கு முன்னேற்றம்

456
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவாவை வீழ்த்திய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பவுச்சர்டுடன் கெர்பர் மோதினார். அபாரமாக ஆடிய பவுச்சர்ட் 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், ரோமானிய வீராங்கனை ஹாலெப், ஜெர்மனி வீராங்கனை லிசிக்கியை 6-4, 6-0 என்ற நேர்செட்களில் வென்றார்.

SHARE